பக்கம்:சிட்டுக் குருவி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கெட்ட குணங்கள்

ஒட்டுக் கேட்டு ரகசியம்
ஊரில் எங்கும் சொல்லுதல்,
கெட்ட குணத்தில் ஒன்றடா.
கேட்பாய், இன்னும் கூறுவேன்.


வேறு ஒருவர் பெயருக்கு,
விலாச மிட்ட கடிதத்தை,
யாரும் அறியா வேளையில்
எடுத்துப் பார்த்தல் கெடுதலாம்.


நண்பன் குற்றம் செய்திடின்,
நயந்து கூறித் திருத்தலாம்.
புண்ப டுத்தும் முறையிலே,
போதித் திடுதல் கெடுதலாம்.

45