பக்கம்:சிட்டுக் குருவி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆட்டம் தன்னில் தோற்றிடின்
ஆத்தி ரம்நீ கொள்வதேன்?
வாட்ட மாக முகத்தினை
வைத்துக் கொள்ளல் கெடுதலாம்.


தீய வழியில் செல்கையில்,
திருத்த முயற்சி செய்திடும்.
தூய நண்பன் மீதுநீ
துவேஷம் கொள்ளல் கெடுதலாம்.


செவிடர், குருடர், முடவர்க்கு
செய்வாய் நல்ல உதவிகள்.
அவரைக் கேலி செய்வதோ,
அதிகக் கெட்ட செய்கையாம்.