பக்கம்:சிதறல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

ஏன் என் நிலைமை மட்டும் என்ன. என் ‘அவர்’,என்னைப் புறக்கணிப்பதற்காகக் கவலைப்படவில்லை. என் ரவியின் செந்தளிர்க் கரங்களால் என்னைத் தொட்டால் போதும் என்று தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அந்தக் கவிதைப் பயித்தியத்தோடு சேர்ந்து நானும் ஒரு கவிதைப் பயித்தியம் ஆகிவிட்டேன்.

ஏணிப்படிகள் என்று தலைப்பு இட்டு ஒரு அழகான கவிதையை எழுதினேன்.

ஏணிப்படிகள்

நீ மிக உயர்கிறாய்; எப்பொழுது?
பொருள் புகழ் இவற்றை மிதிக்காத போது.
யார் சொன்னது?
இவை இரண்டும் அடைய முடியாதவர்கள்.
நீ என்ன நினைக்கிறாய்?
பொருளும் புகழும் இருக்கும்போது தான்
உன்னால் உயர முடியும்
இவை உயர்வுக்கு ஏணிப்படிகள்.

இந்தக் கவிதையும் கல்லூரி மலரில் இடப்பட்டது. மாணவர்கள் பாராட்டினார்கள். ஆசிரியர்கள் சிலர் கண்டித்தார்கள். மரபு கெட்டு விட்டது என்று அவர்கள் கண்டிக்கும் பொழுதுதான் எனக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது. அது முதல் நிறைய கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/64&oldid=1288602" இலிருந்து மீள்விக்கப்பட்டது