பக்கம்:சிதறல்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அடிச் சுவடிகள்

இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்:
அது ஒரு மரணத்தைப்பற்றி.
வாழ்வின் விமரிசனம் அவர்கள் பேசியது.
"போகும் போது எடுத்துப் போவது
ஒன்றும் இல்லை" என்பது அவர்கள் பேசியது.
"விட்டுச் செல்வது புகழ், பொருள், சந்ததிகள்;
இவை மட்டும் அல்ல அடிச் சுவடிகள்:
ஆனால் அவையும் விரைவில் மறைந்து விடுகின்றன.
எப்பொழுது? பலர் அதே வழியில் நடக்கும் பொழுது"

என்ற கவிதையை எழுதிக் கவி அரங்கில் படித்துக் காட்டினேன்.

அன்று எல்லோரும் என்னைப் பாராட்டினார்கள். பொதுவாகத் தலைப்பைக் கொடுத்து விடுகிறார்கள். அதை வைத்து ஒவ்வொருவரையும் கவிதை பாடச் சொன்னார்கள். பாடத்தொடங்கி விட்டேன். மாணவர்களிடையே கவிதை தான் மிகவும் செல்வாக்குப் பெற்று இருந்தது. இலக்கியம் பயிலும் மாணவர்களுள் பத்துப்பேரில் இரண்டு பேர் கவி இயற்றும் ஆற்றல் பெற்றிருந்தார்கள். ஒவியம் தீட்டுவதை போல அவர்கள் கவிதை புனைந்தார்கள். ஆனால் அவற்றில் ஆழ்ந்த பொருள் இருப்பது இல்லை.

என்னைப்போன்ற மாணவர்களின் எழுத்தில் உணர்வு. மேலோங்கி நின்றது. ஆனால் சுவை குறைந்து கிடந்தது. நகைச்சுவையை அதிகம் காண முடிவதில்லை. யாரோ ஒரு சிலர்தான் நகைச்சுவையை வளர்க்கிறார்கள். அழுகைச் சுவையை வளர்க்காமல் இருந்தால் போதும் என்று நினைத்துக் கொள்வது உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிதறல்கள்.pdf/65&oldid=1288604" இலிருந்து மீள்விக்கப்பட்டது