பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேரையர் சிவ பூசாவிதி - 83

பாரப்பாசிங்கென்னகுட்சம் காணும்

பண்பாக மங்கென்ன யோகம் சித்தி தேரப்பா மகாரத்தை வாங்கலாகும்

தெளிவான சிகாரத்தை விடுதலாகும் நேரப்பா இங்கி,துரெண்டுக்குமாகும்

நிலையான தீட்சைஇது மவுன மாலை சேரப்பா யாவருக்குஞ் சித்தியாகும்

தெரிந்தவர்க்குச் சாபமற்றுப் போகும் என்னே. 3.

என்ன எழுத் தொன்றுமூன்று ஆனஐந்தும்

இயல்முப்பா னிர்தீட்சை சர்வ சித்தி நன்னமாய் மோகனதம் பனமும் ஈசன்

நாரணியின் பாதமலர் இதனுள்ளென்று தன்மயமாய்க் காணாமல் கோடா கோடி

சற்குருவை அறிந்திடாது இறந்தார் அப்பா அன்னவர்போல் ஆகாமல் உய்வதற்கு

அருளான வழியொன்று புகலக் கேளே. 4. கேளப்பா மகாரமங்கு மதுவில் வாங்கிக்

கெடியாக அதட்டித்தன்னுள்ளே வாங்கு நாளப்பா சகாரசுழி சங்கென்றுணு -

நாடியே புருவம்பார் பசுமை காணும் வாளப்பா மெய்யாகும் வித்தையெல்லாம்

வளமாயோர் இதழுக்குள் அமுதங் கண்டு நீளப்பா வாசிதனைப் பற்றிக்கொண்டு

நிலையான மூவெழுத்தைச் காண ரன்றே. 5