பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் - 93

போகுமடா அட்டாங்க யோகம் போகும்

பெரியபுகழ் வாசியுட யோகம் போகும் வேகமடாகுருவினுட வேகம் மெத்த

விதிமுறையாய்ச் சொன்னமுறை மறந்திட்டாக்கால் காகமடா போலாகப் பறப்பார் பாரும்

காணாத பருந்ததுபோல் ஆவார் பாரும் நாகமடா சிதம்பரந்தான்் ஆகம் அப்பா

நல்நாகம் போலேயடாபழக்கம் பாரே. 18

பாரப்பாசிதம்பரத்தை எண்பத்தொன்றால்

பரிவாக நடுவிட்டில் வகாரம் மாட்டு

நேரப்பா விடதுதான்் எட்டுக் குள்ளே

நிலையான அகாரத்தை மாட்டு மாட்டு

வாரப்பா பதினாறு வீட்டுக்குள்ளே

வரிசையுடன் நகாரத்தை மாட்டிக் கொள்ளு

ஒரப்பா இருபத்து நாலு வீட்டில்

உத்தனே மகாரத்தை மாட்டிக் கொள்ளே. 19

கொள்ளப்பா முப்பத்தி ரண்டு வீட்டிற்.

குறிப்பான சிகாரத்தை மாட்டிக் கொண்டு

நள்ளப்பா நடுவிட்டில் ஓங்காரந்தான்்

- நலமான ரிங்காரம் ஜங்காரந்தான்்

விள்ளப்பா முப்பத்திரண்டு விட்டில்

வெளியாகச் சூலமது இட்டுக் கொள்ளு

அள்ளப்பா அப்படியே ஆடுந் தோறும்

அப்பனே சிதம்பரந்தான்் ஆடும் பாரே. 20