பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் XI

மணிக்கட்டு இடமணிக்கட்டு முதுகு வலக்காது இடக்காது கண்டம் ஆகிய இப் பதினாறு தான்ங்களிலும் திரிபுண்டரமாகத் தரிக்க, சிரசிலும்நெற்றியிலும் மார்பிலும் மும்மூன்று முறை தரித்தல் வேண்டும். மற்ற இடங்களில் ஒவ்வொரு முறை தரிக்க முக் குறிகளின் இடைவெளி ஒவ்வொரங்குல அளவினவாயிருத்தல் வேண்டும். தரிக்கும்போது அடிக்கடிஅத்திரத்தால் குழைத்துத்தரிக்க.

தரித்தற்குச் சொன்ன முக்குறிகளின் அங்குலப் பிரமாணம் ஏறினால் ஆயுள் சீரணிக்கும்.குறைந்தால் செய்த தவம்போம். பதினாறு தான்ங்களில் தரிக்கும் நடுநடுவே அத்திராயபட் என்று அஸ்தகத்தி செய்ததாகப் பாவித்துக் குழைத்துச் சாத்துக. இது ஆக்கினேய ஸ்நானம். விபூதி தரிக்கும் அளவு பிராமணருக்கு ஒருநிட்சகமும், மற்றவர்க்கு இரண்டரை நிட்கமும் ஆம். நிட்கம் - ஒரு கழஞ்சு.

எஞ்சிய விபூதியோடு கூடிய கைநிறையைச் சலம் விட்டுக் கொண்டு கும்பமுத்திரையாகப் பிடித்து ஓம் ஈசானமூர்த்தாய நம: என்பது முதலிய நமோந்தப் பஞ்சப் பிரமங்களை யுச்சரித்து ஓம் சிவாய வெளஷட் என மூல மந்திரத்தால் சிரசிலே புரோட்சித்துவிட்டு'ஓம்கவசாயநம: வெனக் கை கழுவுக. இதுவே மந்திர ஸ்நானம். விபூதி தரிக்கும்போது கீழே சிந்தினவிபூதியை'ஓம் அத்திராய பட் என்று தாளத் திரையஞ்செய்து மகா முத்திரையினாலே அனைத்து வாரியெடுத்து இருதையாய நம: வென்று இருதையத்திலே வந்ததாகப் பாவித்து ஒடுக்கிக் கொண்டு பின்பு முன்புபோல ஆசமனம் அதரசுத்தி தொடுமிடம் செய்து மூலமந்திரத்தைத் தியானித்துப் பிரமரந்திரத்தி லிருந்து பரம வியோம ரூப சத்தியின் இடமாகக் கடைக்