பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலிப்பாணி முனிவர்பூசாவிதி 120

நாட்டடா வலமூக்கு இல்லாவென்று

நாயகனே இடமூக்கு இல்லாவாகும் ஆட்டடா மேலுதடு ஏயைப் போடு

அடைவான கீழுதடு ஐயைப் போடு கூட்டடா மேற்றந்தம் ஒவ்வைப் போடு

குணமான கீழ்த்தந்தம் ஒளவை நாட்டு மாட்டடா நாவதிலே அம்மென்றப்பா

மணியான கண்டத்தில் அகாரம் எண்ணே. 34

எண்ணவே சக்கரத்திற் பதித்த பின்பு

இதமான சாபங்கள் நிவிர்த்தி செய்து நண்ணவே பிராணபிரதிட்டை செய்து

நவிலுவோம் பூசைசோடசமும்செய்து அண்ணவே சுகந்தபரிமளங்கள் புட்பம்

அடைவாக அர்ச்சித்துக் கணிகளோடு தண்ணவே பலகாரம் பரமானந்தம்

தாம்பூலம் இளநீரும் பாலுந் தேனே, 25

தேனான பாணக்கம் அன்னத்தோடு

தெளிவாகும் ஆறுசுவை வத்து சுத்தி தான்ான சருவமும் சுத்தி வைத்துத்

தயவாகப் பூசித்துத் தியானம் ஒது வானான கற்பூரத் தீபம் ஏற்றி -

வணங்கவே அட்டசித்தும் சித்தியாகும் மானான அட்டசத்தி நடனஞ் செய்வாள்

வானவரும் லோகமெல்லாம் வசியமாமே. 26.