பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2– பரமபதிதுணை அகத்தியர் திருவாய் மலர்ந்தருளிய

தேவியின் பூர்வட்சப் பூசா விதி 16

அகரவுரு வாய்எங்கும் அமர்ந்து நின்ற

அன்னைமனோன்மணிபதத்தை அகத்துட்கொண்டே

இகமதனில் நீதிவர்க்கம் தனைத் தெரிந்தே

இயம்புகிறேன் சோடசத்தை இன்ப மாகத்

தகவுடனே இதை அறிந்து பூசிப் போர்கள் சம்பத்து மிகப்பெற்றுத்தரணி மீதில்

துகளகற்றி அட்டாங்க யோக ராகிச்

சொல்லரிய பேரின்பம் பெறுவார்தாமே. I

அம்மாவாசியுமான அரூபித்தாயே,

- அகண்டபரிபூரணியே அமல சத்தி,

நம்மாலே பாடரியேன் உனது பேரில்

நாவிலே வந்தருள் செய் நாயேனுக்குத்

தம்மாலே சோடசசூத்திரம்பிளங்கத்

தயவுசெய்து நின்பதத்திற் அறிந்து கொள்வாய்,

சும்மாநீஇருக்காதே என்னைக் கண் பார்

சோதிமனோன்மணித்தாயே சுழுனை வாழ்வே. 2