பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- உ பரமபதிதுணை அகத்தியர் திருவாய் மலர்ந்தருளிய

தேவியின் அமரபட்சப் பூசாவிதி 17

நிரஞ்சனமாய் நிராமயமாய் நினைவே யாகி

நீங்காத பெருவாழ்வே லோகமாதா பரஞ்சோதி யானபூரணியே தாயே

பாற்கடலே எனைான்ற பரமே, சத்திச் சரமாகி உலகமெலாம் வளர்க்குந் தேவி

சங்கரியே பெளர்ணமியின் வடிவங்காட்டி துறவான ரிடிமுனிவர் பணியச் செய்த

சோதிமனோன்மணித்தாயே சுழுனை வாழ்வே. 1

சேமமது தருவதற்கு நேரே வந்த

திரிபுரையே சாம்பவியே மனப்பூ வாணிக்

காமனையும் வாமனையும் படைத்ததாயே கன்னியே வளர்பிறையே கனக மாகி

நீமறைவாய் நின்றதென்னநினைவே அம்மா நீடுழிக் காலமெலாம் உலகத் தோர்க்குச்

சோமகலை போலாகி உருவங் காட்டும்

சோதிமனோன்மணித்தாயே கழுனைவாழ்வே. 2