பக்கம்:சித்தர்களின் பூசா விதிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர்கள் பூசாவிதிகள் - V

தேனுமுத்திரை

இரு கரமும் கூட்டி எல்லா விரல்களையும் இடையிடையே கோத்துக் கொண்டு பெரு விரல் இரண்டையும் பிணைத்து, வலக்கைச் சுட்டு விரல் இடக்கை நடுவிரலோடும், வலக்கைச்சிறு விரல் இடக்கை அணி விரலோடும் இடக்கைச் சிறுவிரல் வலக்கை அறிவிரலோடும், சேரச் செய்து நீட்டிக் கவிழ்த்த தேனுமுத்திரையால் 'ஓம் சிவாய வெளஷட்' என்று ஞானாமிர்தம் பொழிந்ததாகப் பாவிப்பதே தேனுமுத்திரை கொடுப்பது.

நாற்சுத்தியொடு தாளத்திரையம், திக்கு பந்தனம், அவகுண்டனம், தேனுமுத்திரையாகிய இந்நான்கும் சேர்ந்து அட்டசங்காரம் எனக் கூறப்படும்.

பின்பு மகாமுத்திரை கொடுக்க, இங்ங்னஞ் செய்தலே சலசுத்தியாம்.

அஸ்திர சந்தியோபாசனம்

வலக்கை நடுவிரல் மூன்றுஞ்சேர்த்து நிமிர்த்து நடுவிரலால் சலத்தைத் தொட்டுக் கோமுக முத்திரையினால் சிரசிலே மூன்றுமுறை 'ஓம் அஸ்திராய வவுஷட் என்று புரோட்சித்து இருகையுங் கூட்டிச் சுட்டுவிரல் மூலங்களில் பெருவிரல் நுனிகளைச் சேர்த்துத் தசாங்க முத்திரையால் 'ஓம் அஸ்திராய சுவாகா என்று சூரியனிடத்திலிருக்கிற சிவனுக்கு மூன்று தர்ப் பணஞ்செய்து 'ஓம் அஸ்திராய நம: என்று பத்துருச் செபித்து மீட்டுமொருமுறை'ஓம் அஸ்திராயசுவாகா என்று