பக்கம்:சித்திரக் கவி விளக்கம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - மாலை மாற்று 387

மன்னனே! சீமான் - அழகுடையவனே! ஆகா இராமா - சகலரும் விரும்பு மிராமனே! வாமனா சீதரா போதா - வாம னனே! சீதரனே ! ஞான மயமானவனே! தா தா தாள் நீ . நீ உனது திருவடித் தாமரைகளைத் தந்தருள்வாயாக (எ . று.)

இஃது கடவுள் வாழ்த்து என்னும் துறை.

4. மாலை மாற்று

இஃது ஒரு செய்யுளின் முதற்கணின்று படிக்கும்போது முடிந்தவாறு போல, இறுதியிலே தொடங்கிப் படித்தாலும் அச்செய்யுளே வர இயற்றப்பட்ட செய்யுளாகும். மாலை மாற்று. மாலைபோல மாறுதலுடையது ; மாலை - வரிசை, மாற்று - மாறுதலுடையது எனினுமாம்.

ஒருசெயுண் முதலீ றுரைக்கினு மஃதாய் வருவதை மாலை மாற்றென மொழிப.??

என்பது மாறனலங்காரம். இதற்குதாரணம் :

1, நீவாத மாதவா தாமோக ராகமோ

தாவாத மாதவா நீ.” (௪)

இதன் பொருள் :-நீவாத மாதவா -நீங்காத பெருந்தவ முடையோனே தா மோக ராகமோ தாவாது - வலிய மயக்க வேட்கையோ நீங்காது ; அம்மாது அவா நீ - (ஆதலால்) அழகிய பெண்ணினுடைய ஆசையினை நீக்கியருள்வாயாக (அவள் விருப் பத்தை நிறைவேற்றுவாயாக) (எ - று.)

இது பாங்கி கூற்று.

2. “ வாயாயா நீகாவா யாதாமா தாமாதா

யாவாகா நீயாயா வா.”. (௫)

இதன் பொருள்-வாயாயா - எமக்கு வாயாதன (கிடையா தவை) யாவை? நீ காவாய் - நீ எம்மைக் காத்தருள் புரிவாய்; யாதாம் (இன்றேல்) யாதாகும்.மாது ஆம் மாதா- இம்மாது பெரிய வருத்தமுறுவள்; யா:ஆகா-( விரும்பினால் ) எவை முடியாதன ?, ஆயா நீ வா- யான் கூறியவற்றை நன்காராய்ந்து 'நீ வருக (எ - று)

68