பக்கம்:சித்தி வேழம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் கவர் கள்வன் தன் மகள் கொண்ட மால் உறுதியாக இருப்பதை உணர்ந்தாள் தாய். அவள் உள்ளத்தைக் கொள்ளே கொண்ட அந்தச் சேந்தனைத் தானும் ஒரு முறை போய்ப் பார்த்து வரலாம் என்ற எண்ணம் அவளுக்கு உண்டாயிற்று. ஒரு நாள் திருவிடைக்கழிக்குப் போனள். அன்றும் முருகன் திருவுலா வந்துகொண்டிருந்தான். கூட்டமான கூட்டம்! எவ்வளவு கூட்டமாக இருந்தால் என்ன? அவனே நன்ருகப் பார்க்க முடிந்தது. அவன் யானையின் மேல் அன்று பவனி வந்தான். யானை மிகப் பெரியது. அதைப் பார்த்து அயர்ந்து போய்விட்டாள். இந்த யானைக்குக் கவளம் கொடுத்துக் காப்பாற்றப் பெரிய மன்னனுகத்தான் இருக்கவேண்டும் என்று வியந்தாள். அந்தக் கவளமா கரியின்மேல் முருகன் எழுந்தருளியபோது இருமருங்கும் அரம்பையர் கவரிகளே இரட்டினர். மேலே குடை நிழற்றியது. யானைமேல் அம்பாரி வைத்து அதன் மேல் வீற்றிருந்தான் அவன். யானை அசைந்து அசைந்து வந்தது. அதன் முகத்திலே முகபடாம் பளபளத்தது. இரு மருங்கும் மணி ஒலித்தது. எங்கே பார்த்தாலும் கண்ணேப் பறிக்கும் பொன்னும் மணியும். . - - இந்த ஒளி வெள்ளத்துக்கு நடுவிலே முருகனுடைய கோலம் ஒளிப் பிழம்பாகத் திகழ்ந்தது. அவன் பொன் மலைபோலக் கம்பீரமாக யானேயின்மேல் வீற்றிருந்தான். யானே ஒரு மலேபோல இருந்தது; அதற்கு மேல் கனகக் குன்று போல அவன் காட்சி அளித்தான். சிறிது நேரம் அவள் எல்லாவற்றையும் மறந்து அவனுடைய திருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/66&oldid=825797" இலிருந்து மீள்விக்கப்பட்டது