பக்கம்:சித்தி வேழம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 சித் தி வேழம் எழிலக் கவர்ந்து விட்டானே! அவனேக் கள்வன் என்று சொல்வதில் தவறு என்ன? - பவனி வந்த முருகன் தன் திருக்கோயிலே அடைந்தான். தாய் அந்த ஊரைச் சுற்றிப் பார்த்தாள். அவனுடைய பெரு மைக்கு ஏற்ற நகரமாக விளங்கியது அது. மாட மாளிகை களும் கூட கோபுரங்களும் வீதிதோறும் விளங்கின. ஊர் சிறப்புறுவது மாளிகைகளால் அல்லவா? அந்த ஊர் நன்கு திவளும்படியாக விளங்கும்படி) அவை நின்றன. அந்த மாளிகைகளுக்கு நடுவே முருகனுடைய திருமாளிகை இருந்தது. ... . . . - திருவிடைக்கழியின் சிறப்பை அறிந்து முருகன் திரு மாளிகையாகிய திருக்கோயிலுக் குள்ளும் சென்ருள். அங்குள்ள அழகிய குராமரத்தின்கீழ் அந்தக் குமரன் நின்று. கொண்டிருந்தான். அவன் மட்டுமா கின்றன்? அருகில் பேரழகி ஒருத்தியும் கின்றுகொண்டிருந்தாள். அவள்தான் வள்ளி; அவளே உற்று நோக்கினுள். - - ‘இவன் பேரழகன்: இவளும் இவனுக்கு ஏற்ற பேரழகி; இவள் என்ன, எப்போதும் இவனைத் தன் கண்ணின்மணியைப் போல வைத்துப் பாதுகாக்கிருளோ? எப்போதும் இவனேயே பார்த்துக்கொண்டிருக்கிருளே! அழகுக் கண்ணுல் இவள் பார்க்கிற பார்வையே இனிமையாக இருக்கிறது. நீலமலர் போன்ற கண்ணே இவன் பக்கலில் வீசுகிருள். இவள் இவனேயே நயந்து காதல் செய்து அடைந்தவள் போலும்! இந்தக் குவளேமா மலர்க்கண். நங்கை நயப்பதில் வியப்பு என்ன? இவன் கட்டிளமையும் பேரழகும் கண்டால் யார்தாம் நயக்கமாட்டார்கள்: இளங்காளே, குழகன், அழகன் ஏன்று சொல்லிச் சொல்லி மகிழலாமே. இவனைப்போல அழகர் யார் இருக்கிருர்கள்? மன்னதி மன்னன், கோ, அழகிய அரசன், அம் கோ. இவன்." - இப்படி அவள் வியந்தபடியே நின்ருள். தன் மகளே மறந்து வியந்தாள் குழகனென்றும் அழகனென்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/68&oldid=825799" இலிருந்து மீள்விக்கப்பட்டது