பக்கம்:சித்தி வேழம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகலை கவர்பவன் திருவிடைக்கழி முருகனிடம் காதல் கொண்ட இள நங்கையின் நிலை பார்க்கப் பார்க்க இரங்கத் தக்கதாக ஆகிவிட் ட்து. எல்லாரையும் போலச் சிரித்து விளையாட வேண்டும் என்று அவள் முயன்ருலும் அவளால் முடியவில்லே. அவள் உடம்பே அவள் வசம் இருக்கவில்லை. காலே எடுத்து வைத்து நடந்தால் அது எங்கேயோ போகிறது. முதல் எட்டு எடுத்து வைத்தால் அடுத்த எட்டு அதைத் தொடரவேண்டாமோ? அந்தக் கால் தொடர்வதில்லே. அப்போது அந்த இளநங்கை தடுமாறுவதைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது: மற்ருெரு பக்கம் இரக்கம் உண்டாகிறது. இன்று எப்படியாவது வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்று துணிந்தாள் அவள். அவளுக்கு வீட்டு வேலே செய்யக் கூடாது என்ற எண்ணமா? அப்படி ஏதும் இல்லே. அவள் உள்ளம் அவளிடம் இருந்தால்தானே, இதை இப்படிச் செய்ய வேண்டும் என்று சிந்தித்து கின்று கிதானித்துச் செய்ய முடியும்? அதைத்தான் திருவிடைக்கழி முருகன் பறித் துக்கொண்டானே! - - * - அவள் வெளியே சென்று நீர் கொண்டு வரலாம் என்று இடுப்பிலே குடத்தை எடுத்துக்கொண்டு போனுள். அவள் தாய் அவள் நிலையை நன்கு உணர்ந்திருந்தாள். எப்போதும் வாட்டத்துடன் உட்கார்ந்திருப்பதை விட, இப்படி ஏதாவது வேலையில் ஈடுபட்டால் கொஞ்சம் சுறுசுறுப்பு வரலாம், அந்த வாட்டம் ஒழியலாம் என்பது அவள் எண்ணம். குடத்துடன் குளத்துக்குப் போள்ை. நீர் நிரப்பினள். எடுத்துக்கொண்டு வந்தாள். அவள் உடல் முன்னேயினும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/70&oldid=825802" இலிருந்து மீள்விக்கப்பட்டது