பக்கம்:சித்தி வேழம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மே கலே கவர்பவன் . 67 கோவினப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ். (சிறந்த வேலைப்பாடுகளையுடைய பவள அணிகளேயும் இளமை யையும் மணக் கோலத்தையும் உடைய பெண்களின் கூட்டங்கள் சுற்றியிருக்கும். கோ - மேன்மை, சிறப்பு. பவளம்: ஆகுபெயர்; அதல்ை ஆன அணிகளுக்கு ஆயிற்று. குழ - இளமை.) "அவனுக்கு அடையாளம் ஏதாவது உண்டா?" "எல்லாரும் எளிதில் கானும் அடையாளம் இருக் கிறது." "என்ன அது?" 'கோழியை வெற்றிக்கு அறிகுறியான கொடியாகப் பிடித்துக்கொண்டிருப்பான். நெடுங்துாரத்தில் அவன் வரும் போதே அவனுடைய கொடி, இன்னன் வருகிருன் என்பதைப் புலப்படுத்தும்.' - கோழி வெல் கொடியோன். “இத்கையவன் எப்படித் திருட்டுத் தொழிலே மேற் கொண்டான்?' "அவனுக்குத் தொழில் திருடுவது அன்று: காவல் காப் பதுவே தொழில். - - - 'நீ சொல்வது வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? வேலியே பயிரை மேயலாமா என்று பழமொழி சொல்வார் க்ள். நீ சொல்வதைப் பார்த்தால் அப்படியும் ஒரு முரணுன செய்கை இருக்கிறதென்று தெரிகிறதே! அவன் காவல் தொழிலிலுள்ளவன் என்று எப்படித் தெரியும்?" "உலகில் யாவரும் அறிவர். என்னுடைய காவலுக்கு உட்படுவது சிறந்த சேனையாகிய அமரர் படை என்று சொல்லி அதைக் காப்பவன். அதல்ை அவனுக்குத் தேவ சேபைதி என்ற பெயரும் அமைந்திருக்கிறது." - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/73&oldid=825805" இலிருந்து மீள்விக்கப்பட்டது