பக்கம்:சித்தி வேழம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - சித்தி வேழம் காவல்.நற் சேனை என்னக் காப்பவன். (நற்சேனை நல்ல சேனையாகிய அமரர் படை.) 'அவன் அணிகலன்களே அணிந்த பெண்கள் சூழ இருப் பவன் என்கிருய், இவன் மேகலையைக் கவர்ந்தான் என்கிருய். அவன் காவல் தொழில் பூண்டவன் என்கிருய்; இங்கே கர வுத்தொழில் செய்தான் என்கிருப். முரணுன செய்திகளாக இருக்கின்றனவே!" - ஆம்; அவனைப்பற்றி நான் கேள்வியுற்றதும் இப் போது நிகழ்வதும் ஒன்றுக்கொன்று விரோதங்தான்.' 'அவனுடைய இயற்பெயர் என்ன? "சுப்பிரமணியன்.” 'அவன் ஊர்?" "திருவிடைக்கழி.” - "அவன் அந்தஸ்து? தேவர்களுக்கெல்லாம் தலைவன். மயிலின்மேல் ஊர்ந்து வருபவன்.' .. "என்னவோ அம்மா, நீ சொல்வது வரவரப்புரியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது; அணிகலன்களே அணிந்த பெண்கள் விரும்பிச் சூழ நிற்பவன், தேவர் படையைக் காப் பவன், தேவருக்குத் தலைவன் இப்படிச் செய்கிருன் என்ருல் நம்பவே முடியவில்லை.” - - "பிறருக்கெல்லாம் அவன் அப்படி இருந்தால் என் பொன்னை மகளளவில் அவளுடைய மேகலையைக் கவர் கிறவகை இருக்கிருன். இந்த உண்மையை மறைப்பதில் பயன் இல்லை.” - - தாய் சொல்வதையே பின் வரும் பாடல் சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/74&oldid=825806" இலிருந்து மீள்விக்கப்பட்டது