பக்கம்:சித்தி வேழம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேகலே கவர் பவன் 69 கோவினைப் பவளக் குழமணக் கோலக் குழாங்கள் சூழ் கோழிவெல் கொடியோன், காவல் நற் சேனை என்னக்காப் பவன்என் பொன்னேமே கலைகவர் வானே! தேவின் நற் றலைவன் திருவிடைக் கழியில் திருக்குரா நிழற்கீழ் நின்ற து விநற் பீலி மாமயில் ஊரும் சுப்பிர மண்ணியன் தானே. (சிறந்த வேலைப்பாட்டை உடைய பவளத்தாற் செய்த அணிகளே யுடைய இளேய மணக் கோலத்தை யுடைய பெண்களின் கூட்டங்கள் சூழும், கோழியாகிய வெல்லும் கொடியை உடையவன், தன் காவலுக்குட்படுவது அமரர்தம் நல்ல சேனே என்று காப்பவன், தேவர்களின் நல்ல தலைவன், திருவிடைக்கழியில் அழகிய குராமரத்தின் கிழலில் நின்ற, மெல்லிய இறகையும் அழகிய பீலியையும் உடைய பெரிய மயில் மேல் ஊர்ந்து வரும் சுப்பிர மணியன், என் திருமகள் போன்ற மகளினிடமிருந்து மேகலேயைக் கவர்வான். . கோ - சிறப்பு. பொன் - திருமகளைப் போன்றவள். பென்னே - பொன்னிடமிருந்து: உருபுமயக்கம் தேவு - தேவர்கள். துரவி மெல்லிய இறகு. பீலி - மயிலின் சிறகில் கண்போலத் தோன்றும் பிஞ்சம். ஊரும் ஏறிவரும். சுப்பிரமணியன் என்பது சுப்பிர மண்ணியன் என விரிந்தது; செய்யுள்விகாரம்.) - இது சேந்தனர் பாடிய பதிகத்தின் முன்ருவது பாட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/75&oldid=825807" இலிருந்து மீள்விக்கப்பட்டது