பக்கம்:சித்தி வேழம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் பயப்பது குணமா? தன்னுடைய மகள் முருகனிடம் வைத்த காதலால் வாடுகிருள் என்று ஒவ்வொரு நாளும் வருந்தினுள் தாய். தன் மகள் கொண்ட காதல் தகாததென்று அவள் எண்ண வில்லை. தேவயானை அமரர்கோன் மகள். வள்ளி மானிட மகள்தானே? அவளே ஆட்கொண்ட முருகன் தன் மகளேயும் ஏற்றுக்கொள்ள இடம் உண்டு என்ற நம்பிக்கை அவளுக்கு எழுந்தது. வந்தவர்களிடம் அவனைப்பற்றிக் குறை கூறிக் கொண்டிருப்பதில் பயன் ஒன்றும் இல்லே. உள்ளத்தை ஒரு வழியே போக்கின தன் மகளே, அந்த ஆசையை விட்டுவிடு என்று சொல்லலாமா? அவளுடைய மகள் கினைத்தபடி யெல்லாம் மனத்தை அலேயவிடுபவள் அல்லவே. தளதளவென்று அரும்பும் மலரும் கொண்டு கின்ற கொடி போலப் பருவ எழில் நிறைந்து துளும்ப இலங்கின அந்த மங்கை இன்று வாடிய கொடிபோல அல்லவா கிடக் கிருள்? இதற்குப் பரிகாரம் ஒன்றும் இல்லயா? - சாட்சிக்காரன் காலில் விழுவதைவிடச் சண்டைக்காரன் காலில் விழுவது நல்லது என்பார்கள். யார் யாரிடமோ சொல்லிக் குறை கூறுவதைவிட முருகனிடமே சென்று முறையிடலாம் அல்லவா? தாயே அப்படிச் செய்வது தக்கதன்று. அப்போது அவளுக்கு ஒர் உண்மை புலயிைற்று. உலகத்தில் உள்ள மக்களாக இருந்தால்தானே நேரே போய்ச் செவ்வி பார்த்துச் சொல்லவேண்டும் முருகன் எங்கும் கிறைந்தவன். எங்கும் செவியுடையவன். மனத்திலே எண்ணில்ை-அன்புடன் உருகி எண்ணில்ை-அந்த். எண்ணத்தை அவன் உணர்ந்து கொள்வான். இப்போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/76&oldid=825808" இலிருந்து மீள்விக்கப்பட்டது