பக்கம்:சித்தி வேழம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடர் பயப்பது குணமா? 71 தனியே இருந்து, மனம் உருகி, தன் மகளுக்கு அருள் புரிய வேண்டுமென்று வேண்டிக்கொள்ளலாமா? வேண்டு வார் வேண்டுவதே ஈவான் அவன் என்று அவனைத் தெரிந்தவர்களெல்லாம் சொல்லுகிருர்களே! அவள் முருகனை கினேந்து வழிபட்டாள். அவனே நேரே விளித்துச் சொல்ல நாணமாக இருந்தது. யாரேனும் மதிப்புக்குரியவர் ஒரு தவறு செய்தால் அவரை நேர்முகமாக வைத்து, “நீங்கள் இப்படிச் செய்வது கியாயமா?' என்று கேட்பது வழக்கம் அன்று. இவ்வளவு பெரியவர், குணம் நிறைந்தவர் இவ்வாறு செய்யலாமா?" என்று கேட்பது மரபு. இந்த அன்னேயும் அவ்வாறே முருகனைப் படர்க் கையில் வைத்து முறையிடத் தொடங்கிள்ை. இரக்கமற்ற செல்வர்கள், யாரேனும் தம் முன்னிலையில் நின்று எவ்வளவு உரக்க அரற்றிலுைம் ஏனென்று கேட்க மாட்டார் கள். ஆனல் முருகனே எப்படிச் சொன்னலும் கேட்கும் ஆற்றலுள்ளவன், பார்க்கும் இடம் எங்கும் ஒரு நீக்கமற நிறைந்துள்ள பரமன். அவள் சிந்தையில்ை முருகனே எண்ணி முறையிடலாள்ை. . . . . . முருகன் பிறரால் வரும் இடையூறுகளே அன்பர்களுக்கு நீக்கி இன்ப வாழ்க்கை அருள்பவன். பேராற்றல் உடையவர் களுக்கும் சில சமயங்களில் இடையூறுகள் வரும்; அவை பிறரால் போக்குவதற்கு அரியவை. அவற்றையும் தீர்த்து அருள்பவன் முருகன். அவன் இந்தப் பெண்ணுக்கு இடரை உண்டாக்குவது பண்பாகுமா? அன்று வானவர்களுக்கு இடுக்கண் வந்தது. ஆயிரத் தெட்டுக் கோடி அண்டங்களைத் தன் கொடுங்கோலாட்சிக்குள் அடக்கி ஆண்டான் சூரபன்மன். அசுரர்கள் அறுபத்தாறு கோடி பேர்கள். தேவர்களோமுப்பத்து மூன்று கோடி தேவர் கள் மடிவதையன்றி வேறு வழி இல்லை. கிரெளஞ்சாசுரன் திடீர் திடீரென்று எழும்பி வந்து எங்கேயாவது படிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/77&oldid=825809" இலிருந்து மீள்விக்கப்பட்டது