பக்கம்:சித்தி வேழம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 - - சித்தி வே மும் அமரரை நாசம் செய்தான். இந்த அக்கிரமத்தைப் போக்க இந்திரனுல் இயலவில்லை; வானவர் சேனையால் இயலவில்லை. எல்லாத் தேவர்களும் கூடிச் சிவபெருமானிடம் முறை யிட்டார்கள். முருகன் தோன்றின்ை. வானவர் தாமே அசுரர்மேல் படையெடுத்துச் சென்ருல் அடியோடு அழிந்து விடுவார்கள். முன்பே சிலர் மடிந்து போனர்கள். அதை அறிந்து முருகன் தேவர்படைக்குத் தானே தலைவனைன். தானே போர்க்களத்தில் கின்று அமர் பொருதான். முருகனுக்கும் சூரனுக்கும் நேரே பகை ஒன்றும் இல்லே. அமரர்கள் மடிய, அது கண்டு கருணேயினல் தானே போர்க் களத்தில் குதித்துப் போர் செய்தான். பேராற்றலும் பெரு வீரமும் உடைய முருகன் சூரன் மார்பினேப் பிளந்தான். இத்தகைய பெருவீரன், பெரியவர்களின் இன்னலப் போக்குவதே தன் கடமையாகக் கொண்ட கருணேயாளன், , என் மகளுக்கு இடர் பயப்பது குணமாகுமா? தான்அமர் பொருது, வானவர் சேனே மடியச் சூர் மார்பினைத் தடிந்தான். (வானவர் சேனே மடிய, அதுக்ண்டு. தானே முன்சென்று வானவர்களோடு அமர், பொருது, சூரனுடைய மார்பைப் பிளந்தான்.) - - அவனுடைய தந்தை பெரிய வள்ளல். தாருகள் வனத்து முனிவர்கள் ஒரு யாகம் செய்து அதிலிருந்து ஒரு மானே உண்டாக்கி அவர்மேலே பாய அனுப்பினர்கள். அவர் மானேக் கண்டு இரங்கினர். தம்மேலே மோத வருகிறதே என்று அஞ்சவில்லே. குழந்தை காலால் உதைக்கிறதென்று தந்தை அஞ்சுவாரா? சிவபெருமான் அந்த மானே எளிதிலே பிடித்துக் கையிலே ஏந்திக் கொண்டார். தம்மைப்பகைத்தவர் களுக்கும் அருள் தரும் கருணே வள்ளல் அவர். அவருடைய பிள்ளே அல்லவா முருகன் தந்தையின் பண்பை வளர்ப்பது தானே புதல்வனது கடமை? அப்படி இருக்க, அவன் என் மகளுக்குத் துன்பம் உண்டாகும்படி செய்வது பண்பாகுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/78&oldid=825810" இலிருந்து மீள்விக்கப்பட்டது