பக்கம்:சித்தி வேழம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - சித் தி வேழம் தோடு போரிட்டு அறநெறியையும் அருளின்பத்தையும் வளர்ப்பதற்காகவே ஆறுபடை வீடுகளில் அமர்ந்திருக்கிருன். அவை பெரிய காவல் கிலேயங்கள். அன்றியும் வேறுபல அழகிய இடங்களிலும் அவன் எழுந்தருளியிருக்கிருன். அவற்றில் ஒன்றுதான் திருவிடைக்கழி. என்ன அழகான நிலையம் அது! வண்டுகள் விரும்பிச் சென்று இசை பாடும்வண்ணம் நிறைய மலரையுடைய பொழிலேப் பெற்றது அந்த நகரம் அங்கே வளமும் அழகும் நிரம்பிய குராமரத்தின் நிழலில் அவன் நிலைபெற்றிருக்கிருன். அவ்வாறு நின்ற கோன், எதற்காக இப்படியெல்லாம் வங் திருக்கிருன் என்பது நினைப்பதற்குரியது. பூம்பொழிலின் வளத்தைக் காண அன்று மங்கையரை மயல் பூட்ட அன்று; புதிய இடத்தைப் பிடிப்பதற்காக அன்று சத்தான அறம் வளரவேண்டும் என்பதற்காகவே அவன் எழுந்தருளியிருக் கிருன். - - - அறச் செயல்கள் வளர்வதற்காக வந்து கிற்கும் பெரு மான் என் மகளுக்கு இடர் உண்டாக்குவது அறம் ஆகுமா?, மறைநிறை சட்டறம் வளரத் தேன்அமர் பொழில்சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழற்கீழ் நின்ற கோன். (வேதத்தில் கிறைந்து விளங்கும் சத்தான அறங்கள் வளரும் படி , வண்டுகள் விரும்பும் சோலைகள் சூழ்ந்த திருவிடைக்கழி என்னும் தலத்தில் கிலேபெற்று விளங்கும் இறைவன். சட்டறம் - சத்தான அறம், சத் என்பது சட்டென வந்தது. வட மொழிச் சொற்களில் வரும் தகரம் சில சமயங்களில் தமிழில் டகர மாக மாறுவதுண்டு வீரட்டானம், மூலட்டானம் என்பவற்றைக் காண்க. தேன் - வண்டுகள். அமர் . விரும்பும்.) இப்படி உலகில் அருள் நிலையங்களே அமைத்துக்கொள் வது வழி வழியே வந்த பண்பு. முருகனுடைய தந்தையாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தி_வேழம்.pdf/80&oldid=825813" இலிருந்து மீள்விக்கப்பட்டது