பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சில பேர் நன்றாக இருக்கும் போதே படுத்துப் புரண்டு கொண்டு, "தூக்கம் வரலேங்க... என்று சொல்வார்கள், அவர்கள் எமனைக் கூப்பிடுகிறார்கள் என்று தான் அர்த்தமாம்!

உறக்கம்

'உறங்குவது போலும் சாக்காடு' என்று திருவள்ளுவரே சொல்லியிருக்கிறார். இதை அப்படியே சொன்னால் விளங்காதே என்பதற்காகத்தான் ராமாயணத்திலே கும்பகர்ணன் என்ற ஒருவனைச் சொல்லி, 'அவன் ஆறு மாதம் தூங்குவான்' என்று சொல்வார் கம்பர். கும்பகர்ணன் ஆறு மாதமா தூங்கினான்? நேருக்கு நேரே சொன்னால் கேட்க மாட்டார்கள் என்பதற்காகத்தான் கும்பகர்ணனைக் கொண்டு வந்து நிறுத்தி சொன்னார்கள். திருமணம் செய்து கொள்வதே எதற்கென்று பல பேருக்குத் தெரியவில்லையே; ஆண் தனியாக இருக்க முடியாது, பெண் தனியாக இருக்க முடியாது என்றுதான் அந்த இணைப்பு ஏற்பட்டது. நற்செயல்கள் எனப்படும் அறம் செய்வதற்கே இல்லறம்.

ஏதோ ஒரு துணையில்லாததால் கொஞ்சமாக சாதனை செய்தவர்கள் தனக்கென்று ஒரு துணையைக் கொண்டு வந்து இணைத்துக் கொண்டால் பல அற்புதங்களைச் செய்யலாம். அதற்குத் தான் ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது. அது தான் வாழ்க்கைத் துணை. அதையெல்லாம் மறந்துவிட்டு பிள்ளைப் பெறுவதற்காகத்தான் கல்யாணம் செய்து கொள்வது என்று நினைத்துக்கொண்டு, (அவனவன் மானாவாரியாகப் பெத்துப் போட்டு ஒரு அரசாங்கத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறான். “சமாளிக்க முடியாது. நிறுத்திக்கடா... என்று அரசாங்கம் சொன்னால் இவன் கிராக்கி பண்ணுவான். "திடுதிப்புனு சொன்னா...நான் என்னாங்க பண்றது?” என்பான்.] : . - .