பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109



"எண்ணரிய பிறவிதனில்
மானிடப் பிறவிதான்
யாதிலும் அரிதரிதுகாண்...
இப்பிறவி தப்பினால்
எப்பிறவி வாய்க்குமோ
ஏது வருமோ ?...

என்று தாயுமான சுவாமிகள் பாடினார்.

ஏனென்றால் இந்தப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல முடியாது.

ஒரு வாழைக்கன்று வைத்தால் அது எதிர்காலத்திலே வாழை மரமாகி, வாழையிலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப் பழம், வாழைத் தண்டு தரும் என்று வைக்கும் போதே சொல்லலாம்.

ஒரு பசு மாடு கன்று ஈன்றால் அது எதிர்காலத்திலே பால் தரும் என்று சொல்லிவிடலாம். எதிர்காலத்திலே மனிதன் என்ன ஆவான் என்று சொல்லவே முடியாது. அதனால் தான் இது அருமையான பிறவி.

எதிர்காலம்

ஒரு வீட்டிலே ஆண் குழந்தை பிறந்து, அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், “என்ன குழந்தை பிறந்திருக்கு? என்று கேட்டால், ஓர் ஆண் குழந்தை!* என்றுதான் பெற்றவள் சொல்லுவாள், அப்படியில்லாமல், “ஒரு ஸ்டேஷன் மாஸ்டர் பொறந்திருக்காரு!" என்று சொல்ல முடியுமா? அந்தக் குழந்தை வரும்போதே பச்சைக் கொடியைப் பிடித்துக்கொண்டா பிறந்தது?

மகாத்மா காந்தியடிகள் பிறந்தவுடனே அவரது தாயார் புட்லிபாயிடம் போய் அக்கம்பக்கத்திலிருந்