பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

தவர்கள், என்ன குழந்தை?" என்று தான் கேட்டார்கள். “ஆண் குழந்தை" என்றுதானே அந்த அம்மா சொன்னாள். அப்படியில்லாமல், "இப்பதான் மகாத்மா காந்தியடிகள் பிறந்திருக்கிறார்; உங்களுக்கெல்லாம் சுதந்திரம் வாங்கிக் கொடுப்பார்! என்றா சொன்னாள்?

சான்றோன்

"ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்..!"

என்ன அருமையான குறள். தாய் பத்து மாதம் சுமந்து பெற்றாள். அவளுக்கு வேறொன்றும் நீ கொடுக்க வேண்டாம். இந்த ஊரிலே உள்ளவர்கள் எல்லாம் தன் மகனை நல்லவன் என்று அவளிடம் சொல்ல வேண்டும். அதுவே போதும் அவளுக்கு. அதுதான் 'கேட்ட தாய்!'

'கேட்ட தாய்' என்பதற்கு என்ன அர்த்தம்? இவள் பெற்ற பிள்ளையை ஊரிலே இருப்பவர்கள் எல்லாம், 'நல்லவன் நல்லவன்' என்று பேச வேண்டும். அது இவளது காதிலே வந்து விழ வேண்டும். அது தான் 'கேட்ட, தாய்'. இந்த அம்மாவே ஒவ்வொருவரிடமும் போய், “'என் மகனைப் பற்றி என்ன நினைக்கிறீங்க? என்று கேட்கக் கூடாது.

இப்படிப்பட்ட நற்பெயரை தாய் தந்தையர்களுக்கு உண்டாக்கிக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்குத் துணையான கல்வியையும் அறிவையும் பெறக்கூடிய பருவம் இளமைப் பருவம்.

காலத்தை வீணாக்காமல், இளமைப் பருவத்திலேயே கல்வி கற்று சான்றோனாக, அறிவுடையவர்களாக உயர வேண்டும் என்பதற்காகத்தான், 'காலம் அறிதல்', 'கல்வி' என்ற இரண்டு அதிகாரங்களையும் திருவள்ளுவர் சொன்னார்.