பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

காலம் போனால் திரும்பி வராது. இன்றைய தினம் என்ன தேதி? 15-3-1984. இந்த உலகம் இருக்கும் வரையில் இனிமேல் 15-3.1984 என்ற தேதி வரவே வராது. இன்றோடு சரி... நாளைய தினம் 16-3-1984. அடுத்த மாதம் 15-4-1984 அடுத்த வருஷம் 15.4.1985. ஆகவே காலம் அவ்வளவு முக்கியமானது.

ஒரு பையன் ஆசிரியரை மூன்று மாதம் கழித்து, "சார்! 15-3-1984ஐ பார்க்க ஆசையாயிருக்கு, எங்கே போனால் பார்க்கலாம்?" என்று கேட்டால், "பழைய காலண்டரைப் பாருடா..." என்று தான் அவர் பதில் சொல்வார். காலம் போனால் வராது திருவள்ளுவர் அதைத் தான் சொன்னார்: உலகத்திலே, எல்லாம் போனால் வரும். காலம் மட்டும் போனால் வராது.

பகல் போனால் ராத்திரி வருகிறது. பகலும் ராத்திரியும் சேர்ந்தால் ஒரு நாள் என்கிறோம். இந்த ஒரு நாள் எதற்கு வருகிறது?

ஒரு பையனிடம் நாள் எதற்கு வருகிறது என்று கேட்டேன். அதற்கு அவன், "அது ரொம்ப நாளா வருதுங்க... உங்க ஊரிலே வரலையா?" என்று திருப்பிக் கேட்டான். குழந்தைகளுக்கு அவ்வளவுதான் தெரியும்.

நாளும் வாளும்

திருவள்ளுவர் இதற்குக் காரணம் சொன்னார், ஒரு நாள் எதற்கு வருகிறது என்றால், விளையாட்டுக்கு வருவதில்லை, உன் ஆயுளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு போக வருகிறது. ஒருநாள் வந்து போய் விட்டால் வாழ்கிற நாட்களில் கொஞ்சம் குறைந்து போனது என்று அர்த்தம்.

தூங்கி எழுந்தவுடன் நாம் அழவேண்டும். “ஐயோ! என் ஆயுளில், ஒரு நாள் போய்விட்டதே! நான் என்ன நல்ல காரியம் செய்தேன் ? என்ன பயனுள்ள காரியம் செய்தேன்?