பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

6ான்ன அறிவை வளர்த்தேன் ? என்ன கல்வி கற்றேன்? என்று விசனப்பட வேண்டும்,

'என் ஆயுளில் கொஞ்சம் போய்விட்டதே!' அப்படியா வருத்தப்படுகிறார்கள்? தூங்கி எழுந்தவுடனே ஒரு 'பெட் காபி' குடிப்பார்கள். ஏனென்றால் ஆயுளிலே கொஞ்சம் போய்விட்டது என்று ஒரு மகிழ்ச்சி!!

"நாளென ஒன்று போல்காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்" [334]

என்றார் திருவள்ளுவர்.

நாள் என்பதனை திருவள்ளுவர் வாள், 'ரம்பம்' என்று சொன்னார். "மரத்தை அறுக்கின்ற 'ரம்பம்' ரம்பத்தின் இரு புறங்களிலும் ராத்திரியும் பகலும் பிடித்துக்கொண்டு உன் வாழ் நாளாகிய மரத்தை அறுக்கின்றன” என்றார்.

அருமை மாணவர்கள் ஒவ்வொரு நாளையும் பொன்னே போல் போற்ற வேண்டும். ஏன்? கல்வி கற்கின்ற பருவத்திலே ஒரு நாள் நமக்குக் கிடைக்காது போனால் போனது தான்.

கற்பவைதான் கற்க வேண்டும்

அதனால் தான் திருவள்ளுவர் 'கற்க--கசடறக்--கற்பவை, என்று சொன்னார். எதைப் படிக்க வேண்டுமோ அதைத்தான் படிக்க வேண்டும். அதுதான் 'கற்பவை' என்பதன் அர்த்தம், எல்லாவற்றையும் படிக்கக் கூடாது. "நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கலாமா? என்று நம் பெற்றோரிடம் கேட்க வேண்டும். ஆசிரியர்களிடம் கேட்கவேண்டும். "இதனைப் படிக்கக் கூடாது தம்பி... உன் மனமும் அறிவும் கெட்டுப் போய்விடும்! என்று அவர்கள் சொன்னால் அதனைத் தொடக்கூடாது.