பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்க்கை இரு விதம்!


தெய்வம் எது?

எந்தத் தொழிலைச் செய்தாலும், எந்த அலுவலகத்தில் வேலை செய்தாலும் அதற்குத் துரோகம் செய்தால் அது நம்மை அழித்துவிடும். "செய்யும் தொழிலே தெய்வம் என்றால் இது தான் பொருள்.

செய்யும் தொழிலை நன்றாகச் செய்ய வேண்டும். ஒருத்தரைக் கூப்பிட்டு, 'இந்த அறைக்குச் சுண்ணாம்பு அடிப்பா' என்று சொல்லுகிறோம். அந்தப் பணியாள், ஒரு நாளைக்குப் பதினைந்து ரூபாய் கூலி கேட்கிறார். பதினைந்து ரூபாய் நாம் கொடுத்துவிட்டால், எவ்வளவு நன்றாக அடிக்க வேண்டுமோ எவ்வளவு அழகாக அடிக்க வேண்டுமோ அத்தனை நேர்த்தியாக அவர் அந்த வேலையைச் செய்ய வேண்டும். அப்படி அவர் செய்தால் அந்தத் தொழில் அவரைக் காப்பாற்றும், தொழிலுக்குத் துரோகம் செய்தால் அதுவே தண்டிக்கும்.

பழைய காலத்திலே ராஜா ஒருத்தர் இருந்தார், அவர் தன் மந்திரியிடம், 'இன்றைய தினம் எல்லா அலுவலகங்களையும் சுற்றிப் பார்க்கணும்...' என்று சொன்னாராம், உடனே மந்திரி சரி என்று சொல்லி ராஜாவை அழைத்துக் கொண்டு போனார். கணக்குப் புத்தகங்களையெல்லாம் ராஜா பார்த்தார். அப்போது ஒரு பெரிய நோட்டுப் புத்தகத்தைப் பார்த்தவுடனே ராஜாவுக்குத் திகைப்பும் கோபமும் ஆச்சரியமும் ஏற்பட்டன. அந்தப் புத்தகத்திலே 'முட்டாள்கள் பட்டியல்' னு போட்டிருந்தது. 'என்னய்யா? நம்ம ராஜ்யத்திலே இப்படி வச்சிருக்கியே?' ன்னு ராஜா கேட்க, மந்திரி, 'பின்னே என்னங்க ராஜா? இது போல் ஒரு