பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

பட்டியல் இருக்க வேண்டாமா? எல்லோருமா அறிவாளியா இருக்காக? முட்டாள்களும் இருப்பாங்களே' ன்னு சொன்னார். ராஜா அந்தப்புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த போது முதல் முதல்லே ராஜா பெயர்தான் எழுதப் பட்டிருந்தது! ராஜாவுக்குக் கோபம். "முட்டாள்கள் பட்டியல்’னு வைத்திருக்கிறதே ரொம்ப தப்பு...அதுலே என் பேரை முதலில் எழுதியிருக்கியே...இது என்ன அநியாயம்?" என்று கடிந்து கொண்டார். "இல்லே மகா ராஜா காரணமாகத்தான் எழுதியிருக்கேன்'’ என்றார் மந்திரி.

"என்ன காரணம்?

"இல்லே போனமாதம் வெளிநாட்டிலேயிருந்து ஒருத்தன் வந்தான். உங்களுக்குக் குதிரைமேல் ரொம்ப ஆசை 'ஒரு குதிரை வாங்கிட்டு வா'ன்னு அவன்கிட்ட சொன்னிங்க... உங்க ஆசையை அவன் புரிஞ்சுக்கிட்டு 'பத்தாயிரம் பொன் கொடுங்க. நான் வாங்கிட்டு வரேன்' னான். உடனே உங்களுக்கிருந்த வேகத்திலே பத்தாயிரம் பொன்னை எடுத்து அவன் கையில் கொடுத்துட்டீங்க...அவன் எந்த ஊர்க்காரன்னு தெரியாது. அவனோட பேர் என்னன்னும் தெரியாது. வாங்கிட்டு வர்ற சக்தி அவனுக்கு இருக்கான்னும் உங்களுக்குத் தெரியாது. உங்க ஆசையிலே எதையுமே விசாரிக்காமல் இப்படிச் செய்துட்டீங்க. இப்படிச் செய்யலாமா? ராஜா செய்தால் நாமெல்லாம் என்ன செய்யறதுன்னு பேசாம இருந்துட்டோம். அதனால்தான் உங்க பேரை முட்டாள் பட்டியல்லே முதல்லே சேர்த்துட்டோம்..." என்றார்.

ராஜாவுக்குக் கோபம் வந்துவிட்டது. "அப்படியா! நீ நினைக்கறே? அவன் குதிரையை வாங்கி வந்து தந்துவிட்டான் என்றால்...நீ என்ன பண்ணுவே?" என்று கேட்டார்.