பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

139

தகப்பனார் விடை

ஒரு தகப்பனாரிடம் “உங்கள் பையன் எதிர் காலத்தில் என்ன ஆவான்? என்று கேட்டேன், “உயரமா வளருவான்! என்றார், அந்தத் தகப்பனார். நான் அவரிடம், "இதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க? என்று சிரிக்காமல் கேட்டேன். "இவன் அண்ணன் வளர்ந்திருக்கிறான். அதனால் இவனும் வளருவான்..." என்று அவர் சொன்னார்.

நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்குக் கோயில் என்று பெயர் வைத்தான் பாரதி. 'பள்ளித் தல மனைத்தும் கோயில் செய்குவோம்...! எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!" என்றான். ஏன் அப்படிச் சொன்னான் பாரதி? ஏனெனில் கல்விக் கூடங்களில்தான் நம் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

மாணவர்கள் எல்லோரும் எதிர்காலத்திலே மேதைகளாக ஆக வேண்டும். விஞ்ஞானிகளாக ஆக வேண்டும். இந்த உலகமே போற்றக்கூடிய அறிஞர்களாக ஆக வேண்டும். அதற்காகத் தான் உங்களைப் பாரதி சொன்ன இந்தக் கோயில்களில் கொண்டு வந்து விடுகிறோம்.

சனியன் பிடித்து விட்டான்"

கலைகள் என்று பேசுகிறோம். 'ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்' என்றெல்லாம் படித்திருக்கிறோம், கலை என்ற சொல்லுக்கு 'அளவு' என்று பெயர். இது பொது அர்த்தம்.

சமையல் செய்கிறார்கள். அதற்குச் சமையற்கலை என்று எப்போது பெயர் வருமென்றால்--அடுப்பிலே பாத்திரத்தை வைத்துத் தண்ணீரை விட்டு அரிசியைப் போட்டுக் கொதிக்க வைத்து அரிசியெல்லாம் சாதமாக வருமே...