பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

அதை அப்படியே அரிசியாகவே இருக்கிற காலத்திலே வடிக்காமலும், அது குழையக் குழைய வெந்து போய்க் கூழாகாமலும் அந்தப் பக்குவத்திலே வடித்து எடுக்கிற போது, அது சாப்பிடக்கூடிய உணவாக ஆகிறதே அப்போது தான்.

கலையின் விளக்கம்

சித்திரக்காரர் சுவரிலே அழகான சித்திரத்தைத் தீட்டுகிறார், 'ஐயோ...! கையிலே இன்னும் வர்ணமெல்லாம் பாக்கி இருக்கிறதே... வீணாப் போயிடுமே! என்று அவர் அந்தச் சித்திரத்தின் மேலே அளவு கடந்து பூசினால் அது கலையாக இருக்காது. அவருக்குச் சித்திரக்காரர் என்று பெயரும் வராது. சித்திரக் கலை என்று எப்போது குறிப்பிடப்படும் என்றால், அதிகமாக அதில் வண்ணத்தைத் தீட்டாமலும், அதிகமாக நிறங்களைச் சேர்க்காமலும், குறைக்காமலும், அளவோடு அதைத் தீட்டினால் அது கவர்ச்சியாக இருக்கும்! அப்போதுதான் அது சித்திரக் கலை என்று பெயர் பெறும். கலை என்றால் பொருத்தமாக அதற்குரிய அளவோடு இருக்க வேண்டும், ஆதலால் தான் எந்தத் துறையிலும் எந்த வித்தையும் அளவோடு நிற்கிற பொழுது தான் அது கலையாகிறது...

ஓர் இசைக் கலைஞர் இருக்கிறார். சபையிலே எதை எதைக் கேட்டுச் சுவைக்கிறார்கள், எந்த அளவுக்குப் பாடினால் அது சுவையோடு நன்றாக இருக்கும் என்று உணர்ந்து அவர் பாடவேண்டும். எந்த அளவுக்கு இங்கு வந்திருக்கிற மக்கள் தனது இசையை ரசிப்பார்கள் என்று - அவருக்கும் தெரியவேண்டும்.

அது இல்லாமல் தன் மனம்போன போக்கிலே தனக்குத் தெரிந்த ராகத்திலேயெல்லாம் அளவுக்கு மீறி இழுத்துக் கொண்டு பாடுவாரேயானால் அவர் சங்கீதக் கலையை