பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

இரண்டரை

இந்தச் சனி கிரகம் இருக்கிறதே, அதற்குத்தான் அதிக கனம். கனம்; அது ஒரு வீட்டிலிருந்து மெதுவாக.. நகர்ந்து இன்னொரு வீட்டிற்கு வருவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகும். அதனால் தான் “ சனிப் பெயர்ச்சி என்றுகூட திருநள்ளாற்றிலே கொண்டாடுகிறார்கள். *'சனியன் பிடித்தான், “அதோ சனியன் வருகிறான்?' என்றால் கெடுதி செய்கிறவன் என்று அர்த்தமில்லை. ஜோசியர்களைக் கேட்டால் எல்லா கிரகங்களும் நல்லதும் செய்யும், கெட்டதும் செய்யும் என்பார்கள், அது அந்தந்த நேரத்தைப் பொறுத்தது.

ஆகையினால் எந்தக் கிரகத்தையும், நல்லதையே செய்யும் என்றோ, இது கெட்டதையே செய்யும் என்றோ சொல்லிவிடக்கூடாது. “சனியன் பிடித்தான் என்றால்: சீக்கிரம் விடமாட்டான் என்றுதான் அர்த்தம், ஏனென்றால் ஒவ்வொரு வீட்டிலேயிருந்து இன்னொரு வீட்டுக்கு வருவதற்கு இரண்டரை ஆண்டுகள் ஆகிறது இல்லையா...! அதனால் தான் அந்தப் பேச்சு: 'சனியன் பிடித்துவிட்டான் என்றால் துன்பம் கொடுக்கிறது என்று அர்த்தமில்லை. சீக்கிரம் விடமாட்டான் என்றே அர்த்தம்.

உதாரணம்

நாம் எங்கேயாவது வெளியூருக்குப் போய்விட்டு வருகிறோம். அலுப்பாக இருக்கிறது. அப்போது நம்மை ஓரு நண்பர் பார்க்க வருகிறார், உட்கார்ந்து கொண்டு ரொம்ப நேரம் பேசிக் கொண்டேயிருக்கிறார். விடமாட்டேன் என்கிறார். கடைசியில் நாம், எனக்கு ரொம்ப வேலை இருக்கிறது. உங்களுக்கும் வேலை இருக்குமே. வீட்டுக்குப் போகலையா?" என்று கேட்கிறோம். உடனே அவர், "நான் அங்கே போய் என்ன பண்ணப் போறேன்.... இங்கேயே கிடக்கிறேன் சார்" என்று சொன்னால்,.