பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

சுவாமிகள் ஆங்கிலச் சொற்களை ரொம்ப அழகாகக் - கையாள்கிறவர் என்று. காரில் வரும்போது நான், எல்லாரையும் கவர் பண்ணிட்டாங்க சாமி.... முதல் முதல்லே சாமியைத் தானே கவர் பண்ணியிருப்பாங்க! என்றேன். வாரியார் சிரித்துவிட்டார்.


செய்யும் தொழிலே தெய்வம்

கல்வி ஒளி

கல்வி, ஒளிவிளக்கு----அதாவது, இருண்ட இடத்தைப் பிரகாசம் ஆக்குவது. அதனுடைய குறிப்பு என்னவென்றால், ஒருவன் கற்று விட்டால் அப்படிக் கற்ற கல்வியைப் பலருக்கும் அளிக்கவேண்டும். அப்படிப் பவருக்கும் ஒளி தருவதுதான் கல்வி.

ஒரு விளக்கின் வெளிச்சத்தினாலே தானே எல்லாவற்றையும் பார்க்கிறோம்! மேசை, நாற்காலி எல்லாவற்றையும் பார்க்கிறோம். அப்பா முகத்தைப் பார்க்கிறோம். அம்மா முகத்தைப் பார்க்கிறோம். எல்லோருடைய முகத்தையும் ஒரு விளக்கால் தான் பார்க்கிறோம். ஒவ்வொருத்தருக்கும் தனித்தனி விளக்கா எரியும்? "இது எங்க அப்பா விளக்கு... அவர் முகத்தை மட்டும்தான் காட்டும்... இது என் மாமன் விளக்கு... இது என் மாமியார் - விளக்கு... என்றா சொல்லுவார்கள். ஒவ்வொருத்தர் முகத்தையும் ஒவ்வொரு விளக்கா காட்டும்?

அனைத்தும் பார்க்கிறோம்

ஒரு விளக்கு எரிந்தால் எல்லோர் முகத்தையும் பார்ப்பதுபோல், ஒருவன் கற்றுவிட்டால் அவன் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வழிகாட்ட வேண்டும், அதனால்