பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163

போட்டிருப்பதில் என்ன தப்பு? மாப்பிள்ளை ஒரு -சாதியென்று போட்டிருக்கு. பெண் வேறு ஜாதின்னு போட்டிருக்கு. ரெண்டு ஜாதிகளுக்குள்ளே திருமணம் செய்றாங்க... அப்போது அது சீர்திருத்த திருமணம் இல்லியா? என்று கேட்டேன் நான்.

பெரியார் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு, “உங்களுக்குக்கூட இன்னும் புரியலியே...? என்றார். நான், "என்னங்கன்னு கேட்டேன், “இந்த உலகத்திலே ஒரு ஆணும் பெண்ணும் தானே திருமணம் செய்துக்கிறாங்க?' என்று கேட்டார். "ஆமாம் என்றேன் சிரித்துக்கொண்டே.

“இது எல்லாருக்கும் தெரிஞ்ச செய்திதானே...அப்படி இருக்கிறபோது சும்மா திருமணம் என்று தானே 'போடணும்...?எவனோ தெரியாத்தனமா, முட்டாத்தனமா நாட்டிலே ஜாதிகளை வளர்த்துட்டான். அதுக்காக நாம் ஏன் சீர்திருத்தம்னு போடணும்? இதைச் சாதாரணமாக 'திருமணம்' என்று போடறதுதானே சரி.

ரொம்ப . பேர் கலப்புத் திருமணம்னு போடறாங்க. "சீர்திருத்தக் கலப்புத் திருமணம்னா என்ன அர்த்தம்? ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்குது... இதிலே என்ன கலப்புத் திருமணம்? அப்படிப் போடலாமா? கலப்புத் திருமணம்னு எப்ப போடணும்னா , 'மாட்டுக்கும் மனுஷனுக்கும் திருமணம் நடந்தால் தான் அதைக் கலப்புத் திருமணம்னு போடலாம் என்றார் பெரியார். நானும் என்னுடன் வந்த கல்லூரிப் பேராசிரியரும் வாய் விட்டுச் சிரித்து விட்டோம். “என்னய்யா. - நான் சொல்றது? என்று பெரியார் - மறுபடியும் கேட்டார். "ஆமாங்க ஐயா... நீங்க சொல்றதுதான் சரி... இனிமேல் இப்படி, யாரும் போடவேண்டிய அவசியமில்லை" என்றேன் நான்.