பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169

துன்பங்கள் மறைய

ஒருத்தர் ரயிலில் வருகிறார். ஸ்டேஷனில் இறங்குகிறார். இறங்கறப்போ ஒரு படிக்கட்டு தடுத்து கீழே விழுந்தார். முட்டியிலே அடிபட்டதும் எலும்பு முறிந்ததும் ரத்தம் வந்ததும் ஒண்ணு பின்னாலே ஒண்ணு நடக்காது. எல்லாம் ஒரே நேரத்திலே நடந்துடும். ஒரு நிமிஷத்திலே நடந்ததை ஒரே நிமிஷத்திலே குணப்படுத்த முடியுமா? இந்தக் காயம் பட்டது ஒரு நிமிஷம்...அது ஆறுவதற்காக 'ஆஸ்பத்திரியில் ஒரு வருஷம் இருக்க வேண்டியிருக்கிறது. நாம் பார்த்து வளர்த்த உடம்புக்கு ஒரு வினாடியில் உண்டான துன்பம் நீங்க---குணமாக ஒரு ஆண்டு என்றால், பல பிறவிகளிலே எவ்வளவு பாவத்தைச் செய்த, நம் மனமானது எவ்வளவு நைந்து போய்க் கிடக்கும்? அதற்கு இறை தியானம், ஒழுக்க தியானம், போன்றவற்றில் நீ எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும்?" என்று நான் ஓர் உதாரணத்தையும் எடுத்துச் சொன்னேன். இந்த உதாரணம் சுவாமிஜிக்கு ரொம்பவும் பிடித்துப்போய், ஒவ்வொரு பிரசங்கத்திலும் இதை மக்களுக்கு எடுத்துச் சொல்லச் சொல்வார்.

அனுபவ பெருமை

வாழ்க்கையிலே அனுபவம் சொல்லிக் கொடுக்கிற பாடத்தினைப் பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் மற்ற அமைப்புகளும் சொல்லிக் கொடுக்க முடியாது.

அதனால் தான் பெரியவர்களிடத்திலே நெருங்கிப் பழகி, அவர்கள் அனுபவ வாயிலாகச் சொல்லும் கருத்துக்களை நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டும். வாழ்க்கையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் அனுபவ உண்மைக்கு விலை மதிப்பே கிடையாது.