பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கூற்றுவன்

எமன் ஓர் ஊருக்கு வருகிறான் என்று வைத்துக் கொள்வோம். வந்து ஒவ்வொருத்தராகப் பார்த்துத் தேதி சொல்லுகிறான் என்று வைத்துக் கொள்வோம். "உங்களை பிப்ரவரி மாதம் ரெண்டாம் தேதி கொண்டு போவேன்..." "அவரை பிப்ரவரி மாசம் பத்தாம் தேதி கொண்டு போவேன்..." "இவரை மார்ச் மாசம் மூணாம் தேதி அழைச்சிக்கிட்டுப் போவேன்... என்று தேதி சொல்கிறான். அப்படிச் சொல்லிவிட்டுப் போனால் சம்பந்தப் பட்டவர்களுக்கு முதல்லே கொஞ்சம் பயம் வந்து அப்புறம் தெளிந்து போய்விடும், ஒருத்தரையொருத்தர் கலந்து பேசிக் கொள்வார்கள்.

"நீங்க எத்தனாம் தேதி போறீங்க..? அவர் எத்தனாம் தேதி போறார்?ன்னு கேட்பார்கள். சில பேர் குறிப்பாகக் கேள்வி கேட்பார்கள். “அந்தப் பலசரக்குக் கடைக்காரர் எத்தனாம் தேதி போறார்? ஏன்னா அவருக்குக் கொஞ்சம் பாக்கிக் கொடுக்கணும். அவரு நமக்கு முன்னால போவாரான்னு தெரிஞ்சுக்சுத்தான்?” என்று குறிப்பாகக் கேட்பார்கள்.

காலம் வந்தவுடன் காலன் வருகிறான். அதனால் தான் காலனுக்கு அவ்வளவு மரியாதை, அவன் ஒருத்தன் தான் நாம் சொல்றதைக் கேட்கவே மாட்டான். கெஞ்சிக் கேட்டால்கூட. கடன்காரன் கேட்பான், காலன் .மட்டும் நாம் சொல்வதைக் கேட்கவே மாட்டான்.

ரத்தம் குறைந்தது

'எனக்கு வயசாகி விட்டது. நான் சொல்ற வார்த்தைகளை என் பிள்ளைகள் கூடக் கேட்கிறதில்லே... என் பேரன் பேத்திகளும் கூடக் கேட்கிறதில்லே...' என்று வருத்தப் 'படுகிறார்கள். இப்படிச் சொல்வது ரொம்பத் தப்பு. இதுவரைக்கும் ரத்த பாசத்தாலே, நாம் சொல்றதை