பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

முனிவர்களைப்பற்றி விளக்கம் செய்கின்ற “நீத்தார் பெருமை” என்ற அதிகாரத்தில் இந்த ஐந்து வகையினையும் ஆசிரியர் திருவள்ளுவனார் ஒரு குறட்பாவால் விளக்கியுள்ளார்.


சுவையொளி ஊறு ஓசை நாற்ற மென்றைந்தின்
வகை தெரிவான் கட்டேவுலகு"
(கு. 27)

இந்த ஐந்து வகைகளின் நுட்பங்கள் மிகப் பலவாக - அமைந்துள்ளனவாகும். அந்த நுணுக்கங்களையெல்லாம் - அறிந்தவர்களே அறவோர்கள் என்னும் முனிவர்கள் ஆகும்.

இவைகளின் தொடர்பாக இருப்பனவற்றைத் தான் ஐம்புலன்கள் என்று சொல்வார்கள், இந்த உலகமே ஐந்து பிரிவுகளாகிய பூதங்களினால் செயல்பட்டு வருகின்றது.

பூதங்கள்

நிலம், நீர், தீ, காற்று, விண் என்ற ஐந்தினையும் ஐந்து பூதங்கள் என்று சொல்லுவது உலக வழக்கு.

தாயுமான சுவாமிகள் பாடுகின்றபோது,

"ஐவகையெனும் பூதம் ஆதியை வகுத்து"

என்று கூறுகின்றார்.

ஐம்பூதங்கள் அடங்கிய இந்த உலகத்திலிருந்து நாம் வந்திருக்கின்றோம். ஆனபடியால் இந்த ஐந்து பூதங்களும் நம் உடம்பின் உள்ளும் இருந்து வருகின்றன.

இந்த ஐந்து, இயற்கைப் பிரிவுகளும் இயல்பாக உள்ள உலகத்தினை 'அண்டம்' என்று சொல்லுகிறோம், மிகச் சிறிய அளவில் அமைந்துள்ள இந்த உடம்பினைப் 'பிண்டம்' என்று சொல்லுவார்கள். 'அது அண்டம்' — 'இது