பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39

ஒன்று, அடிக்கடி பேசும்போது மறந்துவிட்டேன் என்று சொல்லுவது, மற்றொன்று, “இப்பொழுது என்ன அவசரம், - அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்----என்பது --- இவ்விரண்டு வார்த்தைகளும் யாருடைய நாவில் அடிக்கடி வருகின்றதோ, அவர்கள் முன்னேற மாட்டார்கள் என்பது உறுதி.

பிறிதொரு காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பேசாமல், இப்பொழுதே நல்ல செயல்களைச் செய்யுங்கள் என்று ஆசிரியர் திருவள்ளுவனார் வற்புறுத்திக் கூறுகின்றார்.

'அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க, (கு. 36)

மிக உயர்ந்த சிந்தனை அடங்கிய இந்தக் குறட்பாவின் கருத்தினை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்தல் வேண்டும்.

என்னுடைய நண்பர் ஒருவர், அவருக்கு முதிர்ந்த காலம் ஆகிவிட்டது. மனைவியும் மக்கள் பலரும் இருந்தார்கள். ஒரு நாள் மருத்துவர் அவரைப் பரிசோதனை செய்து பார்த்துவிட்டுக் குடும்பத்தாரிடம், அவர் 'அதிக. நாள் வாழ்வதற்கு இயலாது' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார், அப்போது அந்தப் பெரியவர் அறையும் குறையுமாகப் பேசிக் கொண்டிருந்தார். மருத்துவர் சொன்னதைக் கேட்டு, எல்லோரும் 'ஓ' என்று அழுதார்கள். "ஐயா! போகிறீர்களே, எங்களுக்கு என்ன புத்தி சொல்லிவிட்டுப் போகிறீர்கள்? என்று மனைவியும் .மக்களும் முதியவரைப் பார்த்து, அடிக்கடி கேட்டார்கள், அழுதார்கள்.

அதற்கு அந்த முதியவர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். “இது வரைக்கும் சொன்ன புத்திமதிகளை எதைக் கேட்டீர்கள்? இப்பொழுது நான் அவசரத்தில் இருக்கிறேன். முன்னே சொன்னதையே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுப் போனாராம்.