பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

மாந்தர்க்கு உணர்ச்சி' (453) என்று ஆசிரியர் திருவள்ளுவனார் தெளிவாகக் கூறி வைத்தார்.

கவலை

கவலை என்பது மனிதப் பிறவி எடுத்த ஒவ்வொருவருக்கும் வந்து போவதாகும் என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். புத்திசாலித்தனத்தினால் கவலையினைப் போக்கிக் கொள்ள வேண்டும். கவலைக்கு அடிமையாகி விட்டால் மனம் கெட்டு விடுவதாகும். அறிவின் துணை கொண்டு மனத்தினை நன்றாக வைத்திருக்க வேண்டும். கவலை என்கின்ற ஒன்று தனிப்பட்டதொரு நிலையல்ல என்று அறிதல் வேண்டும். மனத்தினைத் துன்பத்திற்கு அடிமையாகாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அடிமையாகி விட்டால் கவலை என்ற நிலைமை வந்துவிடும். அறிவின் துணை கொண்டு அதனைப் போக்க வேண்டும்.

கம்பி

நேராக இருக்கும் ஒரு இரும்புக் கம்பியினை வட்டமாக வளைத்தால் *வளையம் என்ற பெயர் வந்துவிடுகிறது. "வளையம் என்பது எங்கேயோ வெளியிலிருந்து வந்து விடவில்லை. வளைத்ததால் அந்தப் பெயர் வந்தது, வளைந்த அந்தக் கம்பியை நேராக ஆக்கிக் கொண்டால் வளையம் என்ற பெயர் மறைந்து விடுகிறது.

அதுவே போல மனத்தினை துன்பத்திற்கு அடிமையாக்கிய பொழுது. 'கவலை' என்கிற பெயர் வருகிறது. அறிவின் துணைகொண்டு மனத்தினை உறுதியாக வைத்துக்கொண்டால் கவலை என்கிற பெயரே வராமல் பார்த்துக் கொள்ளலாம். இந்த உடம்பில். ஒரு வருடத்திற்கு எவ்வளவு அழுக்கு சேருமோ அத்தனை அழுக்கும் ஒரே வினாடியில் இந்த மனதிற்குள் சேர்ந்துவிடும் என்று கூறுவது மிகையாகி விடாது.