பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

நீ. ஜபமாலை உருட்டலாம், நெற்றியில் நீறணியலாம், நீண்ட ஜடை தரிக்கலாம். ஆனால் உன் உள்ளத்தில் கொடிய விஷமிருக்கையில். நீ - எங்ஙனம் கடவுளைக் காண்பாய்?

"மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்று நாம் செவியாரக் கேட்கின்ற நல்லவர்களின் கருத்து எல்லாம் மனத்தினைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவேண்டும் என்பதையே வற்புறுத்துவன வாகும்.

மகான்கள், ஞானிகள், முனிவர்கள், சித்தர்கள்,. அந்தணர்கள் என்றெல்லாம் பல பெயர்களில் பெருமையாகப் பேசப்படுகின்ற அறவோர்களின் அருள்மொழிகளைக். கேட்பதாலும், நினைப்பதாலும், நாவார சொல்லிக் கொண்டிருப்பதாலும், மனம் தூய்மையாக்கப்படும் என்று: சொல்லப்படுகின்றது.


ஞான மொழிகள்

மறைமொழி என்றும், மந்திரம் என்றும் சொல்லப்படுகின்ற சொற்கள் எல்லாம் ஞானிகளின் 'நாவினால் சொல்லப்பட்டவை ஆகும். மந்திரம் என்ற சொல்லுக்குப் பொருள், '* நினைப்பவனைக் காப்பது" என்பதாகும். மனத்தின் தன்மையினை எல்லாம் நன்கு ஆழ்ந்து சிந்தித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். மனம் தூய்மையினைப் பற்றி. அகத்திய பெருமான் குறித்துள்ளதைக் கருதுதல் வேண்டும்.

"மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாகும். .