பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

கொண்டிருந்தான். மற்ற நண்பனும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஒரு மணி நேரம் கழித்து சொல்லிக் கொண்டிருந்தவனே கேட்டுக் கொண்டிருந்தவனைப்பார்த்து, உன்னிடம் என்ன சொன்னேன்? என்று: கேட்டான். அதற்கு மற்றவன் என்னென்னமோ சொன்னாயே, எனக்கு நினைவில்லை, எழுந்து போ என்றான்.

சொன்னவன் கதியே இப்படி என்றால், கேட்டவன் கதி என்ன ஆகும்? நாம் சொன்ன வார்த்தைகள் மற்றவன் மனதில் ஒரு மணி நேரம் கூட தங்கவில்லை என்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நிலைத்து நிற்கின்ற சொற்களைச் சொன்னவர்களை 'தவம் செய்த முனிவர்கள்' -: என்று குறிப்பிடுகின்றோம்.

"நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே என்று சொன்ன முனிவர் எண்ணத்தில் எவ்வளவு உயர்ந்த சிந்தனைகள் தோன்றியிருந்திருக்க வேண்டும்? தன்னுடைய மனத்தில் மறதி ஏற்பட்டிருந்தாலும், நாவினால் மட்டும் மறைமொழிகள் சொல்லப்பட்டால், எவ்வளவு பயன் உள்ளவையாக இருக்கும் என்று அந்த மகான் கூறினார்.

கொடியவை

கொடிய தீய குணங்களிலே ஒன்று 'மறதி' என்பதாகும். எப்பொழுதும் மறதி குணம் இருப்பவர்களுக்குப் பெருமையோ அல்லது சிறப்போ எந்த நேரத்திலும் உண்டாகாது. ஏதேனும் ஒருவரைக் கேட்டால் மறந்து விட்டேன் என்று சொல்வதும், அந்தச் செயலை செய்து முடித்து விட்டீர்களா என்று கேட்டால், "இப்பொழுது என்ன அவசரம்? என்று சொல்லுவதும் இரண்டு தீமையான பழக்கங்கள் ஆகும்.