பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கற்போர்க்கு கற்கண்டு போல் இனிக்கின்ற மகான் வேத நாயகம் பிள்ளை அவர்களின் பாடலை ஒவ்வொருவரும் படிக்கின்ற பாக்கியத்தினைப் பெற்றே ஆகவேண்டும்,

விளக்கம் தருகிறார்

"உலகத்துக்கெல்லாம் ஒளியினைத் தரக்கூடிய கதிரவன் என்று அழைக்கப்படும் சூரியன், கிரணங்களாகிய தன்னுடைய கைகளினால் கடவுளை வணங்குகின்றான். பறக்கின்ற பறவைகள் எல்லாம் பாடிப்பாடி இறைவனை வழிபடுகின்றன.----மரங்கள் எல்லாம் பல வண்ணங்களையுடைய பூக்களைக் காட்டி இறைவனைப் போற்றுகின்றன. ஐம்பூதங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விண் எல்லாம் தங்களுக்குரிய தொழில்களை முறையாகச் செய்து இறைவனை வணங்குகின்றன- அளவு கடந்த பெரிய சமுத்திரம் தன்னுடைய ஓசையினால் இறைவனை வாழ்த்தி வணங்குகிறது--- இவ்வாறிருக்க "ஏ! மனமே! நீ இறைவனை வணங்காமல் இருக்கலாமா?. மேற்கூறிய உண்மைகளை எல்லாம் மகான் வேதநாயகம் பிள்ளை நயமான ஒரு பாடலில் அமைத்து . வைத்திருப்பதை நாம் பாடிப் படித்து மகிழ்தல் வேண்டும்.

"கதிரவன் கிரணக் கையால்
கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியொடும் ஆடிப் பாடி
துதிசெய்யும், தருக்கள் எல்லாம்
பொதி அவர் தூவிப் போற்றும்
பூதம்தம் தொழில் செய்து ஏத்தும்
அதிர்கடல் ஓவியால் வாழ்த்தும்
அகமே! நீ வாழ்த்தாது என்னே!