பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

57

பழமொழிகள்

மக்களிடையே பழகி வருகின்ற பழமொழிகள் எண்ணிறந்தவையாக இருந்து வருகின்றன. வாழ்க்கைக்கு இன்றியமையாத செய்திகள் எல்லாம் அந்தப் பழமொழிகளோடு இருப்பதால் நல்லபடியாக 'வாழ்வதற்கு அவைகள் வழிகாட்டியாகவும் அமைந்துள்ளன என்று கூறுவது மிகை பாகாது.

மிகப் பழைய காலந் தொட்டு, பேச்சு வழக்கில் இருக்கின்ற சில கருத்துக்களைச் சிந்திக்கின்றபோது பல உண்மைகள் நமக்குப் புலனாகின்றன. ஒரு செய்தியினை மனதில் நாம் கருதிப் பார்ப்பது நம்முடைய சிந்தனையைத் தூண்டுவதாகும்.

உலகப் பொதுமறையான திருக்குறளினை அருளிய திருவள்ளுவர் தமது நூலினை 133 அதிகாரங்களில் அமைத்து வைத்திருக்கின்றார். ஒவ்வொரு அதிகாரமும் உயர்ந்த நெறியினை விளக்கம் செய்கிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 குறட்பாக்களை அமைத்து தாம் சொல்ல வந்த கருத்தினை 10 முறைகளில்---வகைகளில் எடுத்துக் கூறுகின்ற வழக்கம் திருவள்ளுவரின் கருத்தாக.. அமைந்துள்ளது.

ஒவ்வொரு அதிகாரத்தின் கருத்துக்களை பத்து தடவை சொல்லி வைக்கின்றார். ஒரு கருத்தினை 10 தடவை சொன்னால் முழுமையும் விளக்கம் செய்துவிட்டதாகும் என்பதும் புலப்படுத்தப்பட்டு விட்டது, என்றும் சொல்லலாம்.

பத்து தடவை

இன்றைய நடைமுறைப். பேச்சுக்களில் 10 தடவை சொல்வது என்பது அடிக்கடி குறிப்பிடப்படுவதைக் காண்கிறோம். ஒரு பெரியவர், ஒரு வாலிபனிடத்தில், நல்ல