பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சொன்ன பதிலைக் கேட்டு பழையபடி பிச்சை எடுக்கத்தானே போகின்றான் என்று வியப்படைந்தார். இந்தப் பழைய புத்தியைத்தான் “பிச்சைக்கார புத்தி' என்று சொல்வது.

ஊறிப்போனது

பழையபடி பிச்சை எடுப்பதற்காகவே அவன் எண்ணுகின்றான். ஆனபடியால் பணம் வந்த பிறகும் அவனுடைய தாழ்ந்த புத்தி போகவில்லை. அதுவேபோல, சிலர் மேலான நிலைக்கு வந்தபிறகும், ஒரு காலத்தில் கீழான நிலையில் இருந்த புத்தி தான் இப்பொழுதும் வருகிறதே என்று நினைத்து -- பழைய புத்தியைக் குறிப்பதற்காக-- 'பிச்சைக்கார புத்தி' என்று சொல்லுவது உண்டு. பிச்சை எடுக்கிற பழக்கம் என்பது இந்தப் பேச்சுக்கு அர்த்தமாகிவிடாது. பிச்சைக்காரனிடத்தில் இருந்து இந்தக் கருத்து வந்ததினால் இந்தப் பெயர் சொல்லப்படுவதாயிற்று.

கண்கள்

“காமத்திற்குக் கண்ணில்லை என்றொரு பேச்சு, பழமொழி போல பேசப்படுவது உண்டு. இதற்கு சரியான பொருள், பலருக்குத் தெரியாமல் இருப்பது வியப்பானது, அல்ல. பொதுவாக ஒரு எண்ணத்தினை இந்தப் பழமொழிக்கு விளக்கமாகச் சொல்லுபவர்கள் உண்டு. காமம் என்பது பொதுவாக சிற்றின்ப உணர்ச்சியினையே குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. விருப்பம், விழைவு என்ற பொருளில் காமம் என்ற சொல் சொல்லப்படுகிறது. என்றாலும், ஆண், பெண் இருபாலரிடையே நிகழ்கின்ற உணர்ச்சிப் போக்கினை சொல்லுகின்ற சொல்லாகவே காமம் என்பது பேசப்பட்டு வருகின்றது. காம உணர்ச்சிப் பட்டவர்கள், எதனையும் சிந்தித்துப் பார்க்காமல் மனம்