பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

போன போக்கில் தங்கள் எண்ணத்தினை நிறைவேற்றிக் கொள்ளுகிறார்கள் என்பதனைக் குறித்துப் பேசுகின்ற இடத்தில் “காமத்திற்குக் கண்ணில்லை என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.

ஆசிரியர் திருவள்ளுவனார், இந்தச் சிறப்பான மொழியின் பொருளினைத் தெளிவாக விளக்கம் செய்து காட்டுகின்றார். காமத்தின் வசப்பட்ட காதலர்கள் இருவர் தங்கள் அன்பினை வளர்த்துக் கொண்டு வருகின்றனர். காதல் வளர்ச்சி முதிர்ந்த நிலை அடைகின்றது. காலம் நேர்ந்த பொழுதெல்லாம் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டிருந்த காதலர்கள் இடைவெளி இல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

அவன் ஆசை

காதலன் காதலியை தன்னுடைய கண்களிலேயே கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றான். காதலர்களின் கற்பனை உலகம் பற்பல நேரங்களில் எல்லையற்று செல்லுவது வழக்கம். தான் விரும்புகின்ற காதலியைத் தன்னுடைய கண்களிலே கொண்டு வந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டான்.

நம்முடைய கண்களில் இரண்டு கண்மணிகள் இருக்கின்றன. அந்தக் கண்மணிகளைப் பார்க்கின்றபொழுது இரண்டு பாவைகள் தெரியும். அந்தப் பாவைகள் தெரிந்தால்தான் கண்களுடைய பார்வை நன்றாக இருக்கிறது என்பது பொருளாகும். கண்களிலே பாவைகள் தெரிய வில்லை என்றால் அவன் பார்வையை இழந்துவிட்டான் என்பது பொருளாகும். அதாவது பாவைகள் இல்லாதவன் குருடன் என்பதே குறிப்பாகும்.

இந்தக் காதலன், காதல் மிகுதியினால் அந்தப் பாவைகளைப் பார்த்துப் பேசுகின்றான். "கண்களில் இருக்கின்ற