பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

கருமணிகளில் வசிக்கின்ற பாவைகளே! நீங்கள் இருக்கின்ற இடத்தைவிட்டுப் போய்விடுங்கள். ஏனென்றால், நான் காதலிக்கின்ற அந்தப் பெண்ணைக் கண்களில் கொண்டு வந்து வைத்துக் கொள்ள வேண்டும். பாவைகளாகிய நீங்களும் அங்கே இருந்து கொண்டிருந்தால், என்னுடைய: காதலி வந்து இருப்பதற்கு இடம் இல்லாமல் போகும். ஆதலால் நீங்கள் (பாவைகள்) போய்விடுங்கள்."

அவன் பேச்சு

இவ்வாறு கண்ணின் கருமணிகளில் இருக்கின்ற பாவைகளைப் பார்த்து காதல் மிகுதியினால் அந்தக் காதலன் பேசுகின்றான். கருமணிகளில் இருக்கின்ற பாவைகள் போய் விட்டால், குருடனாகி விடுவோம் என்பதை அவன் மறந்தான். அவனுடைய காமத்தின் அடிப்படையான காதலி தான் அவனுக்குப் பெரிதாகத் தோன்றினாளே அல்லாமல், பாவைகள் போய்விட்டால், பார்வை போய்விடும் என்பதை மறந்தான். கண்கள் போனாலும் காதலியோ வேண்டும் என்ற உயர்ந்த கருத்தினை வெளிப்படுத்துவதுதான் "காமத்திற்குக் கண்ணில்லை" என்ற உயர்ந்த பழமொழி யாகும். இந்த அரிய உண்மையினை ஆசிரியர் திருவள்ளு வனார் குறட்பாவில் அமைத்துக் காட்டுகின்றார்.

"கருமணியிற் பாவாய்நீ போதாய் யாம்வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

பாவைகளைப் பார்த்துச் சொல்லுகின்றான் :"நீங்களும் இருந்து கொண்டிருந்தால் என்னுடைய காதலி இருப்பதற்கு இடம் இல்லாமல் போய்விடும் ஆனபடியால், பாவைகளே போய் விடுங்கள்.

அன்றும் இன்றும்

2000 ஆண்டுகட்கு முன்னதாக திருக்குறள் தாங்கிக் கொண்டிருக்கிற உயர்ந்த கருத்து இன்றைய தினமும் நடை முறைகளில் பேசப்பட்டு வருவதைச் சிந்திக்கின்ற பொழுது