பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85

சொன்னார். அவ்வாறு சொல்லிக்கொண்டேச் அந்தச் சாமியார் தன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த குரங்கினை உற்றுப் பார்த்தார். அந்தக் குரங்கு பல காலமாக அவரிடம் சேவை செய்து வருவதால் பரிவோடு சாமியாரிடம் வந்தது.

குரங்கின் தொண்டு

சாமியாருக்குப் பணிவிடை செய்கின்ற ஆள்போல அந்தக் குரங்கு சாமியார் பேசுகின்ற வார்த்தைகளை எல்லாம் பழக்கத்தினால் எப்படியோ புரிந்துகொண்டு அவருக்குத் தொண்டு செய்து வந்தது. குரங்கினைப் பார்த்த சாமியார், "என்னுடைய நண்பர் சாப்பிடுவதற்கு இலையைக் கொண்டு வந்து போடு" என்று சாடைக் காட்டி குரங்கிற்கு உணர்த்தினார். அந்தக் குரங்கு சாமியார் கட்டளையினை நன்றாகப் புரிந்துகொண்டது.

உடனே அந்தப்புறம் சென்று அந்தக் குரங்கு ஒரு இலையினைக் கொண்டு வந்து அந்தச் சாமியாரின் நண்பர் உட்கார்ந்திருந்த இடத்தில் அவருக்கு முன்னே போட்டது. நண்பர் வியப்புடன் மகிழ்ச்சி அடைந்தார். இலையைப் போட்ட உடனே, சாமியார் தன் கையில் வைத்திருந்த பலமான தடிக் குச்சியினால் அக்குரங்கின் தலையில் இரு அடிகள் கொடுத்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அவர் நண்பருக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப் பிறகு அந்தச் சாமியார் குரங்கினைப் பார்த்து, "இலையில் சாதம் போடு" என்று சாடையால் உணர்த்தினார். உடனே அந்தக் குரங்கு சாதம் கொண்டு வந்து இலையில் வைத்துக் குருநாதரைப் பார்த்துக் கொண்டே இருந்தது. மீண்டும் சாமியார் தன் கைத்தடியினால் இரண்டு அடிகள் குரங்கின் தலையில் கொடுத்தார்.

இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த நண்பருக்கு வியப்பும், வேதனையும் கலந்து வந்து கொண்சி. க.--6