பக்கம்:சிந்தனைக் களஞ்சியம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

டிருந்தது. பிறகு குழம்பு பரிமாறும்போதும், தண்ணிர் கொண்டு வந்து வைத்தபோதும் அந்தச் சாமியார் குரங்கின் தலையில் போட்டவண்ணம் இருந்தார்.

சாமியார் அடித்தல்

அந்தக் குரங்கோ, அடியையும் வாங்கிக்கொண்டு பணிவோடு சாமியார் சொன்ன வேலைகளை எல்லாம் செய்துகொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து சாமியாரின் நண்பருக்குக் கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. சாமியாரைப் பார்த்து, "சுவாமி, இந்தக் குரங்குதான் நீங்கள் சொல்லுகின்ற எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்கின்றதே, அப்படி இருக்க ஏன் அதை அடித்துத் துன்புறுத்துகிறீர்கள்" என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சாமியார், "என்ன செய்வேன்? இது எனக்குப் பழக்கமாகிவிட்டது. இதை என்னால் நிறுத்த முடியாது" என்று சொன்னார். நண்பருக்கு மேலும் மேலும் கோபம் அதிகரித்து விட்டது. சாமியாரைப் பார்த்து நண்பர் சொன்னார், "இது என்ன அநியாயமாக இருக்கிறதே! நீங்கள் சொல்லுகின்ற வேலைகளை எல்லாம் அந்தக் குரங்கு செய்கின்றதே! அப்படி இருந்தும் நீங்கள் அடிக்கின்றீர்கள். இந்தக் கொடுமையை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. ஆதலால் நான் தங்களிடமிருந்து விடை பெற்றுச் செல்லும் வரையிலாவது இப்படி அடிக்காமல் இருங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.

சாமியார் நண்பரின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து சம்மதம் தெரிவித்தார். அப்படியே செய்கிறேன் என்று சொன்னார். குரங்கினை அடிக்கின்ற குச்சியினைத் தூக்கிப் போட்டுவிட்டார். வேறு பக்கமாக சாமியார் திரும்பி உட்கார்ந்து கொண்டுவிட்டார். நண்பருக்கு மனத்திருப்தி