சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்
அவருடைய திறமை, அறிவு, ஆற்றல், தியாக புத்தி ஆகியவைகளை அளவாகக் கொண்டு, மதிப்பிட வேண்டுமானால், தோழர் மா.சிங்காரவேலருக்கு லெனின், டிராட்ஸ்கி, சக்லத்வாலா போன்றவர் வரிசையிலே இடந்தர வேண்டும். ஆனால் கந்த புராணம், காந்தி புராணம் படிக்கும் இருவகையினைரையும் போற்றிப் புகழ்ந்த மக்கள், இந்த ஓப்பற்ற புரட்சி வீரனை சாமான்யமாகக் கருதினர். நாளாவட்டத்திலே, சில இலட்சியவாதிகளுக்குத் தவிர, மற்றவர்களுக்கு அவருடைய பெயரும் மறந்து விட்டது என்று கூறிவிடலாம். தோழர் ம. சிங்கார வேலரே, ஏகாதிபத்தியத்தால் தாக்கப்பட்ட முதல் வீரர்— ஆனால் முப்புரி இல்லாத காரணத்தால் மங்கினார். அவருடைய பெருமைப் பாக்கள், படத்திறப்பு விழாக்கள், இல்லை! இராது!. அவர்,மா.சிங்காரவேலுச் செட்டியார். பரதவர் குலம்.(மீன் பிடிப்போர்) நெய்தல் நிலநாயகன்; சிங்காரவேல் சர்மாவாக இருந்திருந்தால், அவருடைய சிலையை மாஸ்கோவிலே நிறுவ வேண்டும் என்று மயிலை கூறும்.
மா. சிங்காரவேர் மறைந்தார் என்ற போதிலும். எதிர்பாராத திடுக்கிடக்கூடிய விதத்திலே நேரிட்ட மரணமல்ல. மரணத்தின்போது அவர் தம்முடைய உழைப்பு வீண் போயிற்றே என்ற சந்தேகம் கொண்டு சஞ்சலமடைத்திருக்கவும் மாட்டார். ஏனெனில் 11-2-46-ல் அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 84. அவருடைய இரண்டு அடிப்படை இலட்சியங்களாகிய சுயமரியாதை, சமதர்மம் என்பவை, ஓங்கி வளர்ந்திருப்பதைக் கண்ட பிறகே அவரின் கண்கள் மூடின. சுயமரியாதையும்
4