பக்கம்:சிந்தனைச் சுற்றுலா.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா -- to IV v. -- - - + + + அந்தப் பெண்ணால் தான் செய்ய முடியும்! ஏன் தெரியுமா? அந்தப் பெண்தான் அந்தக் குழந்தையின் தாய, தாய்ப் பாசம் தந்த வேகம், தைரியம், பிடிவாதம், பெருமுயற்சி, உத்வேகம்தான் அவளை ஏற முடியாத குன்றில் ஏறச் செய்தது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தையைக் காப்பாற்றிக் கொண்டு வந்தாள். தாயின் வீரத்தைப் போற்றினர் பலரும். தாயோ பிறரது பாராட்டைக் கூடப் பொருட்படுத்தாது, தன் குழந்தையை ஆரத்தழுவி கொஞ்சிக் கொண்டிருந்தாள். 'தாய்ப் பாசத்திற்கு இவ்வளவு சக்தியா! உடற்கல்வித்துறை என்னும் குழந்தை இப்பொழுது இப்படித்தான் குன்றிலே தனியாக விடப்பட்டதோர் சூழ்நிலையில் அழுது கொண்டிருக்கிறது. கீழே விழுந்து விடுமோ மீண்டும் தேறி விடுமோ என்று பரிதாப நிலைக்குள் கிடக்கிறது. பலரும் பலவழிகளில் முயன்று கொண்டிருக்கிறார் கள். தாயாக இருந்து அரசு காக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எண்ணம் திட்டமாகி, திட்டங்கள் செயலாகி, குழந்தை காக்கப்பட வேண்டும் என்று எல்லோருமே விரும்புகிறோம்! இப்பொழுது குழந்தை அழுது கொண்டிருக்கிறது என்று மட்டுமே கூற விரும்புகிறோம்! தாயே பாராமுகமாக இருந்தால் சேயின் நிலை என்ன?